
கடந்த 11-9-24 அன்று அஜீஸியா தஃவா சென்டரில் பெண்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக் கொண்ட முன்னால் பிரபலம் சகோதரி M. G. ரஹீமா அவர்கள் சிறப்புரையாற்றினார். அதில் அவர்கள் கடந்து வந்த பாதையும் இஸ்லாம் அவர்களை எவ்வாறு ஈர்த்தது என்பதையும் உம்ராவின் மூலம் அவர்கள் பெற்ற படிப்பினையையும் விளக்கினார்கள்.

மேலும் சிறப்புரையாற்றிய முஹம்மது ரியாசுதீன் அவர்கள் அஜீஸியா தஃவா சென்டரில் புதன்கிழமை தோறும் நடக்கும் 40 ஹதீஸ்கள் வகுப்பு பற்றி விளக்கி இந்த வகுப்பில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுத்தார்.அடுத்து குழந்தைகளுக்கான தனி அறையில் நிகழ்ச்சியும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் சொன்னவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

இறுதியில் M.G. ரஹீமா அவர்களுக்கு ஜித்தா இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் சார்பாக விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை ஜித்தா இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மண்டல நிர்வாகிகள் அப்துல் மஜீத், பொறியாளர் அப்துல் ஹலீம், அஹ்மத் பஷீர், செய்யத் இஸ்மாயில், செல்வகனி, தாஹா ரசூல், இலியாஸ் மற்றும் IWF மகளிர் அணியினர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்தனர்.
தகவல்:
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்
(தமுமுகவின் அயலக பிரிவு)
ஜித்தா மேற்கு மண்டலம்.
அன்புடன் M. சிராஜ்
Comments