top of page
Writer's pictureRaceTamil News

மாதச் சம்பளம் 10,000 ரியால் - கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தில் வேலை





கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது நிரந்தரப் பதவி என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அனைத்து சலுகைகளையும் சேர்த்து மாதம் 10,000ரியால் சம்பளம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வேலைக்கான தகுதிகள் : (படிப்பு & திறமை)


அடிப்படை தகுதி அரபு பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அரபு மற்றும் ஆங்கிலம் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அரபியை ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து அரபியிலும் மொழிபெயர்க்கும் திறனும் விரும்பத்தக்கது. கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவதில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வேலைக்கான வயது வரம்பு :


21 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 28 பிப்ரவரி 2023 இன் அடிப்படையில் வயது கணக்கிடப்படும். செல்லுபடியாகும் கத்தார் குடியிருப்பு அனுமதியுடன் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24 மார்ச் 2023 க்கு முன் தூதரக இணைப்பாளருக்கு (நிர்வாகம்) விண்ணப்பிக்க வேண்டும்.


மின்னஞ்சல் முகவரி: cr1.doha@mea.gov.in



16 views0 comments

Comments


bottom of page