top of page

ஜெத்தாவில் உருது கவியரங்கம்

Writer: RaceTamil NewsRaceTamil News

78வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ஒற்றுமையைப் போற்றும் விதமாக ஜெத்தா நகர இந்தியப் பெண்கள் பன்னாட்டு பள்ளியில் உருது முஷாயிரா நிகழ்ச்சி வெகு விமரிசையாக அரங்கேறிய நிகழ்வில் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். குல்பானின் பொதுச் செயலாளர் முகமது அஸ்லம் ஆப்கானி, இலக்கிய விழாவை தொடங்கி வைத்தார்.


உருது குல்பானின் தலைவர் திரு நாசர் பர்னி மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மிர்சா குத்ரத் நவாஸ் பேக் ஆகியோர் முக்கிய விருந்தினர் அஜிசுல் ரப், அப்துல் காதிர் சித்திக் மற்றும் இந்திய தூதரக அதிகாரி இமாம் மெஹ்தி ஹுசைன் ஆகியோரை வரவேற்று மரியாதை செலுத்தினர். உருது குல்பான் தலைவர் திரு. மெஹ்தாப் காதர் வரவேற்புரை வழங்க, தொடர்ந்து இந்திய சமூகத்தின் முக்கியஸ்தர்களான திரு. ஜகாரியா பிலாத், இந்திய பன்னாட்டு பள்ளியின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த டாக்டர் சலீம், தலைமை விருந்தினரான திரு. அஜீஸ் உல்ரப், அப்துல் காதிர் ஹசன் சித்திக், இந்திய துணைத் தூதரக அதிகாரி திரு. இமாம் மெஹ்தி ஹுசைன் ஆகியோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.


மெழுகுவர்த்தி ஏற்றி முஷாயிரா தொடங்க, 14 பிரபல உருதுக் கவிஞர்கள், வெளிநாட்டில் இருந்த 4 பேர் மற்றும் உள்ளூர் கவிஞர்கள் 10 பேர், தங்கள் கவிதைகளை சொல்லி மக்களை மகிழ்வித்தனர். மெஹ்தாப் காதர், முஜாஹித் சையத், டாக்டர். பிரின்ஸ் முஃப்தி ஜியா, நேஹா பிரகாஷ்ராய், அம்ரினா கைசர், சந்த்தோ பந்தி, சையத் வஹீத் குவாத்ரி ஆரிப், நாசர் பர்னி, ரிஸ்வான் மஹ்ஸ்பி, அர்ஷத் கித்வாய், டாக்டர். கமர் சுரூர், முகமது அஸ்லம் ஆப்கானி, ஷுஜாவுதீன் மடிஹா, மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த அஹமத் பாஷா ஆகியோர் இதில் கலந்து கொண்டு தங்கள் உருது இலக்கிய திறமையால் மக்களை உற்சாகப்படுத்தினர்.


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மிர்சா குத்ரத் நவாஸ் பைக்கின் நன்றியுரையுடன் முஷைரா நிறைவு செய்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் நிகழ்ச்சி நடத்திய உருதுக் கவிதை ஆர்வலர்கள், மற்றும் கவிஞர்கள் அனைவரையும் வெகுவாக பாராட்டினார்கள்.


அன்புடன் M. Siraj

 
 
 

Comments


bottom of page