top of page

அமீரகம் முதல் மின்சார சரக்கு விமான உரிமத்திற்கு ஒப்புதல்

Writer's picture: RaceTamil NewsRaceTamil News


முழு மின்சார சரக்கு விமானத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை தற்காலிக ஒப்புதல் அளித்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் ஒரு நாடு மின்சார சரக்கு விமானத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி பயன்பாடு அதிகரிக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த ஒப்புதல் உள்ளது.


இது தொடர்பான முடிவு அபுதாபியில் நேற்று அமைச்சரவையில் கூடி எடுக்கப்பட்டது. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், சரக்குப் போக்குவரத்துத் துறையின் எதிர்காலத்தையும், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் மாற்றுவதற்கு இது ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் இருக்கும் என்று கூறியுள்ளார்.


இந்தப் புதிய முறையானது சரக்கு போக்குவரத்துத் துறையின் செலவுகளைக் குறைப்பதோடு, தூய்மையான எரிசக்தி பயன்பாடு மேலும் பல பகுதிகளுக்குப் பரப்ப உதவும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் குறித்து கவலை அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறைகளை நோக்கி நகர்கின்றன. ஐக்கிய அரபு அமீரகம் இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



Comments


bottom of page