top of page

அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டு வீடியோவை பரப்பியாவர் அமீரகத்தில் வெளிநாட்டினர் கைது

Writer's picture: RaceTamil NewsRaceTamil News



சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ மூலம் "ஒழுக்கமற்ற செயல்களை" ஊக்குவித்ததற்காக சந்தேக நபர்களின் குழுவை ஷார்ஜா காவல்துறை கைது செய்துள்ளது. சந்தேகநபர்கள் ஆசிய நாட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.


சமூக ஆசாரத்தை மதிக்காத நபர்களுக்கு எந்த சலுகையும் அளிக்க மாட்டோம் என்று ஷார்ஜா காவல்துறை தெரிவித்துள்ளது. பொது ஒழுங்கை பாதிக்கும் எந்த விதமான தார்மீக மீறல்களையோ அல்லது தவறான போக்குகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் ஷார்ஜா காவல்துறை அறிக்கையில் வெளியிட்டுள்ளது.



சமூக ஊடகங்களில் நெறிமுறையற்ற செயல்களின் வீடியோ கிளிப் பரவி வருவதாக ஷார்ஜா காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், சிறிது நேரத்தில் வீடியோவில் இருந்த அனைவரையும் கைது செய்தனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் பொது வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை சூழ்நிலையை உருவாக்க ஷார்ஜா காவல்துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பையும் சுறுசுறுப்பான பங்களிப்பையும் பெற வேண்டும் என்று சார்ஜா காவல்துறை தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு வகையிலோ இதற்கு முரணாக ஏதேனும் காணப்பட்டால், காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள 'ஹாரிஸ்' தளத்தின் மூலம் புகாரளிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.



28 views0 comments

Comments


bottom of page