ஐக்கியிரபு அமீரகம் முழுவதும் இன்று ஈதுல் அதா தொழுகை சிறப்பாக நடைபெற்றது . இந்த தொழுகையில் அமிரகத்தின் தலைவர்கள் மற்றும் பட்டத்தை இளவரசர்களும் :கலந்து கொண்டு பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
அபுதாபி:
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், இன்று காலை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் மசூதியில் வழிபாட்டாளர்களுடன் ஈத் அல் அதா தொழுகையை நடத்தினார்.
மேலும், ஐக்கிய அரபு அமிரகத்தின் மறைந்த தலைவர்கள், ஷேக்குகள் மற்றும் தியாகிகளின் ஆன்மாக்கள் சொர்க்கத்தில் இளைப்பாற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்.
ஷேக் முஹம்மது,மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானின் கல்லறைக்குச் சென்று, அவரது ஆவிக்காக அல் ஃபாத்திஹாவைப் படித்து, அவருடைய ஆன்மாவை நித்திய சாந்தி அடைய எல்லாம் வல்ல அல்லாஹ்வைக் கேட்டுக் கொண்டார்.
தொழுகையைத் தொடர்ந்து, ஷேக் முகமது அவர்கள் விழாவையொட்டி வழிபாட்டாளர்களுடன் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்.
ஷார்ஜா:
ஷார்ஜாவின் ஆட்சியாளரும், சுப்ரீம் கவுன்சில் உறுப்பினருமான டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்கள், இன்று காலை ஷார்ஜா மசூதியில் ஈத் அல் அதா தொழுகையை நிறைவேற்றினார். ஷார்ஜாவின் துணை ஆட்சியாளர் ஷேக் சுல்தான் பின் அஹ்மத் பின் சுல்தான் அல் காசிமி ஷார்ஜா ஆட்சியாளருடன் பல ஷேக்குகள், மூத்த அதிகாரிகள், உயரதிகாரிகள், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுடன் பிரார்த்தனை செய்தார்.
தொழுகைக்குப் பிறகு, ஷேக் சுல்தான் வழிபாட்டாளர்களுக்கு ஈத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்
துபாய்:
துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் துபாயின் துணை ஆட்சியாளரான அவரது சகோதரர் ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஆகியோர் ஜபீல் மசூதியில் ஈத் தொழுகையை நடத்தினர்.
ராசல் கைமா:
ராசல் கைமாவின் உச்ச கவுன்சில் உறுப்பினரும், ஆட்சியாளருமான ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமி மற்றும் ரசல் கைமாவின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சவுத் பின் சக்ர் அல் காசிமி ஆகியோர் இன்று காலை ஷேக் கலீஃபா பின் சயீதில் ஈத் அல் அதா தொழுகையை நிறைவேற்றினர்.
பல ஷேக்குகள், மூத்த அதிகாரிகள், பிரமுகர்கள், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களும் ராசல் கைமா ஆட்சியாளருடன் பிரார்த்தனை செய்தனர்.
அஜ்மான்:
சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் அஜ்மானின் ஆட்சியாளருமான ஷேக் ஹுமைத் பின் ரஷித் அல் நுஐமி இன்று காலை அஜ்மானில் உள்ள ஷேக் ரஷித் பின் ஹுமைத் மசூதியில் ஈத் அல் அதா தொழுகையை நிறைவேற்றினார்.
ஷேக் ஹுமைத் உடன் தொழுகையை அஜ்மானின் பட்டத்து இளவரசர் ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுஐமி மற்றும் பல ஷேக்குகள், மூத்த அதிகாரிகள், உயரதிகாரிகள், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தொழுகைக்குப் பிறகு, அஜ்மான் ஆட்சியாளர் வழிபாட்டாளர்களுக்கு ஈத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்.
உம்முல் குவைன்:
உம் அல் குவைனின் பட்டத்து இளவரசர் ஷேக் ரஷீத் பின் சவுத் பின் ரஷித் அல் முஅல்லா இன்று காலை அமீரகத்தில் உள்ள அஹ்மத் பின் ரஷித் அல் முல்லா மசூதியில் ஈத் அல் அதா தொழுகையை நடத்தினார்.
உம் அல் குவைனில் உள்ள பல ஷேக்குகள், மூத்த அதிகாரிகள், உயரதிகாரிகள், முஸ்லீம் சமூகங்களின் உறுப்பினர்களும் உம்முல் குவைன் பட்டத்து இளவரசருடன் பிரார்த்தனை செய்தனர்.
தொழுகைக்குப் பிறகு, ஷேக் ரஷீத் ஷேக்குகள், மூத்த அதிகாரிகள் மற்றும் வழிபாட்டாளர்களுடன் ஈத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்
👍