
அமிரகத்தில் தனியார் துறை, இலவச மண்டலங்கள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஜனவரி 1, 2023 முதல் வேலை இழப்பு திட்டத்திற்கு குழுசேருவதை ஐக்கிய அரபு அமீரகம் கட்டாயமாக்கியுள்ளது. மேலும் 2023 ஜூன் 30 ஆம் தேதிக்குள் இந்தக் குழுவில் சேர தவறினால் 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். அதேபோன்று 90 நாட்களுக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டாலும் கூடுதலாக 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
அமீரகத்தின் வேலை இழப்பு காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து எமிரேட்ஸ் குழும ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது இந்த திட்டத்தில் பங்கேற்பாளராக சேருவது கட்டாயமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில் "எமிரேட்ஸ் குழும ஊழியர்கள் வேலையின்மை காப்பீட்டில் பதிவு செய்வது தன்னார்வமானது" என்று உறுதிப்படுத்தினார். அமீரகத்தின் வேலை இழப்பு காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து எமிரேட்ஸ் குழும ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது இந்த திட்டத்தில் பங்கேற்பாளராக சேருவது கட்டாயமில்லை என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் எமிரேட்ஸ் குழுமத்தின் ஊழியர்கள் தானாக முன்வந்து வேலையின்மை காப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்று எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Dh16,000 க்கும் குறைவான அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்கள் மாதத்திற்கு 5 Dh5 அல்லது வருடத்திற்கு Dh60 மற்றும் VAT செலுத்த வேண்டும். சராசரி அடிப்படை சம்பளத்தில் 60 சதவீதம் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு வேலை இழப்பிற்கு ஈடுசெய்யப்படும். Dh16,000 க்கு மேல் அடிப்படை சம்பளம் உள்ள பணியாளர்கள், திட்டத்தின் கீழ் மாதத்திற்கு Dh10 அல்லது Dh120 ஆண்டு பிரீமியமாக செலுத்த வேண்டும்.
முதலீட்டாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள், 18 வயதுக்குட்பட்ட சிறார்கள், ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் புதிதாகப் பணிபுரியும் ஓய்வு பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
Comments