அமிரகத்தில் கோவிட் 19 கட்டுப்பாடுகளின் போது விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராதத்தை 50% தள்ளுபடியுடன் செலுத்துவதற்கான வாய்ப்பை அமிரகத்தின் தேசிய நெருக்கடி, அவசரநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அபராதம் செலுத்த வேண்டிய குடியிருப்பாளர்கள் இரண்டு மாதங்களுக்கு 50% தள்ளுபடியைப் பெறலாம். இந்த தள்ளுபடி மார்ச் 15 முதல் அமலுக்கு வரும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வு அதிகபட்சமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இதனால் விதி மீறலுக்கான அபராத தொகையை இணையதளங்கள் மூலமாகவும், உள்துறை அமைச்சகத்தின் ஸ்மார்ட் ஆப்ஸ் மூலமாகவும், அந்தந்த போலீஸ் கட்டளைகள் மூலமாகவும் அபராதத் தொகையை செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவிட் 19 கட்டுப்பாடுகளை மீறியதற்காக அமீரகத்தில் அரை லட்சம் திர்ஹாம்கள் வரை அபராதம் விதிக்கப்பட்டது. பொது இடங்களில் முகமூடி அணியாததால் பிடிபட்டவர்களுக்கு 3000 திர்ஹாம் அபராதமும், கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை மீறுபவர்களுக்கு அரை லட்சம் திர்ஹாம் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்று பலருக்கு பல நேரங்களில் செய்திகள் வந்தன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த 50% தள்ளுபடியைப் பயன்படுத்தி அதிகமானோர் அபராதத்தைச் செலுத்தத் தயாராக இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Comments