அபுதாபியில் வாகனங்களில் இருந்து குப்பைகளை சாலைகள் மற்றும் பொது வீதிகளில் வீசியதற்காக அபுதாபியில் மொத்தம் 162 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பல்வேறு சாலைகளில் வாகனம் ஓட்டியபோது ஓட்டுநர்கள் தங்கள் கார் கண்ணாடிகளில் இருந்து கழிவுகளை கொட்டும்போது காவல்துறையிடம் பிடிபட்டதாக அபுதாபி போலீசார் தெரிவித்தனர்.
வாகனம் ஓட்டும் போது கழிவுகளை வெளியேற்றும் ஓட்டுநர்களுக்கு 1,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். அதனுடன், வாகனத்தின் மீது ஆறு கருப்பு புள்ளிகளும் விதிக்கப்படும்.
அமீரகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு சாலையைப் பயன்படுத்துவோர், குறிப்பிட்ட இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டவேண்டும் என்றும், இது அமீரக நாகரிக தோற்றத்தை பாதுகாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமீரக வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுவதுடன், வாகனங்களில் இருந்து கழிவுகளை வீச வேண்டாம் என பயணிகளை எச்சரித்துள்ளது.
Comments