மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் அறிவித்த இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாக்கும் நான் முதல்வன் கல்லூரி கனவு 2024 திட்டத்தின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி 15.05.2024 அன்று நாடார் சரஸ்வதி கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேனி மாவட்ட +2 தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. சஞ்சீவனா IAS அவர்கள் தலைமை தாங்கினார் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சிவ் பிரசாத் IPS மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், “நான் முதல்வன்” திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட
தேனி மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு மற்றும் தனியார் 80 மேல்நிலைப்பள்ளிகளின் 1400 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சியில்
சவுதி அரேபியா நாட்டில் இருந்து தன்னம்பிக்கை பேச்சாளர் ஜெத்தா தமிழ்ச்சங்கம் பொறியாளர் VKMM காஜா மைதீன் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் வழிகாட்டுதல் உரையாற்றி சிறப்பித்தார்.
பொறியாளர் காஜா மைதீன் அவர்கள் தேனி மாவட்டம் உத்தமபாளையம் சேர்ந்தவர் என்பதால் கலந்து கொண்டவர்கள் ஆர்வத்துடன் உரையை கேட்டு பெரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சொந்த மாவட்டத்தில் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய தருணத்தில் அரசு சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை உரையாற்றிய பொறியாளர் காஜா மைதீன் அவர்களுக்கு சவுதி அரேபியா தமிழர்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
அன்புடன் சிராஜ்
Comments