வளைகுடா நாடான பஹ்ரைன் நாட்டில், தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா, நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு, நாற்பது வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் அயலகத் தமிழர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் என முப்பெரும் விழா, வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் முகமது ஹுஸைன் மாலிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நாகை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர், தமிழ்நாடு அரசின் டெல்லிக்கான சிறப்பு பிரதிநிதி மற்றும் திமுக விவசாயி அணியின் செயலாளருமான திரு.AKS விஜயன் அவர்கள் கலந்து கொண்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்க, வண்ணத் தமிழில், கலைஞர் அவர்களின் எழுத்து நடையில் குடந்தை ஆரிப் அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தி,
துணைத் தலைவர் கருணாநிதி சண்முகம் அவர்கள் தலைவர் கலைஞர் இலக்கியம் பற்றி வாழ்த்துரை வழங்க ஆலோசனைக் குழுத் தலைவர் கபீர் அகமது அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களின் சாதனைகளைப் பட்டியல் போட்டுப் பேசினார். ஆலோசனைக்குழு உறுப்பினர் சர்புதீன் அவர்கள் பேசும் போது தலைவர் ஸ்டாலின் அவர்களின் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், கனவு இல்லம் போன்ற அருமையான திட்டங்களை எல்லாம் புதிதாக பொறுப்பேற்று உள்ள பிரிட்டன் அரசு பின்பற்ற உள்ளதை எடுத்துக் கூறினார்.
சேகர் ராஜலிங்கம் பேசுகையில், சமத்துவபுரம் என்ற திட்டம் செயல் வடிவம் கொடுத்து நடைமுறைக்கு கொன்டு வந்தவர் கலைஞர் என்றார். இணைச் செயலாளர் மன்னை முபாரக் பேசுகையில் பெரியார், அண்ணா கண்ட கனவுகளை எல்லாம் தலைவர் கலைஞர் சட்டங்களாக்கி, திட்டங்களாக மாற்றினார். கலைஞர் கண்ட கனவுகளை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நினைவாக்கிக் கொண்டுள்ளார் என்றார்.
பெருவை பிரபா பேசுகையில்.
1999-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாகை மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஏ.கே.எஸ்.விஜயன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டதை நினைவு கூர்ந்தார்.
சவூதி தி மு காவின் முக்கிய தலைவர் மற்றும் கோபார் தமிழ் சங்கத்தின் தலைவரும் ஆகிய சிக்கந்தர் பாபு பேசுகையில் தமிழ் நாட்டில் ஒரு அரசியல் செய்ய வேண்டும் என்றாலோ அல்லது அரசியல் பேச வேண்டும் என்றாலோ அது கலைஞர் என்ற மாபெரும் அரசியல் ஆளுமையின் பெயரைத் தவிர்த்து யாரும் அரசியல் பேச முடியாது என்று புகழாரம் சூட்டினார்.
திராவிட இயக்கப் பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் வல்லம் பசீர் பேசுகையில், தலைவர் கலைஞர் ஒரு போராளி அது தான் அவரை இந்தியா முழுமைக்கும் திரும்பி பார்க்கவைத்தது , மிசா காலத்தில் எந்த ஏடுகளையும் வெளியிட தணிக்கை துறை அனுமதிக்காத போது கலைஞர் அவர்களே முரசொலி அலுவலகம் சென்று பிரதிகளை அச்சிட்டு அதை அவர் அண்ணா சாலையில் மக்களுக்கு கொடுத்தார் என்பதை நினைவுபடுத்தினார்.
தலைமை உரை நிகழ்த்திய
வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் தலைவர் முகமது ஹுசைன் மாலிம் அவர்கள்,
திராவிட கருத்தியலையும், நாம் வாழும் சமூகத்திற்கு கலைஞர் செய்த சாதனைகள் இன்றைய இளைய தலைமுறை கேட்டறிந்து அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்றும் எதிர்கால சந்ததியினர் கலைஞரின் 200 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்னும் சிறப்பாக கொண்டாடுவார்கள் என்று பேசினார். மேலும் 2000 ஆண்டு, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஒரு நல வாரியம் வேண்டும் தலைவர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்ததை உணர்ச்சி பொங்க கலைஞருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டார்.
விழா பேருரை நிகழ்த்திய தமிழ் நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி, முன்னாள் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுக விவசாயி அணியின் செயலாளர் திரு AKS விஜயன் அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களின் உயரிய பண்புகளைப் பற்றியும்.
அரசு அலுவலர்கள் பணியில் இருக்கும் போது இறந்து விட்டால், அவர்களின் குடும்பத்தினர்களுக்கு உடனடியாக அரசு பண உதவிகள் செய்ய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்தது முதல், நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வந்து, நிலமற்ற விவசாயிகளுக்கு நிலங்களை பட்டா வுடன் வழங்கியது மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை காத்தவர் கலைஞர் என்றார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற மிகப் பெரிய சமுதாயப் புரட்சியை இந்தியாவில் உருவாக்கியவர் தலைவர் கலைஞர் என்றும், பெண்களுக்கு கல்வி, பெண்களுக்கு வேலை வாய்ப்பு, சொத்துரிமை, போன்ற எண்ணற்ற திட்டங்களை உருவாக்கியவர் கலைஞர் என்றும், அவர் வழி வந்த நம் முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், பெண்கள் தங்கும் விடுதிகள், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக கூறினார்.
அரங்கு நிறைந்த இந்த நிகழ்ச்சியை துணைப் பொறுப்பாளர் சுல்தான் இப்ராஹிம் தொகுத்து வழங்க, மக்கள் தொடர்பு செயலாளர் சதீஷ் குமார் நன்றியுரை கூறினார்.
அன்புடன் சிராஜ்
Comments