
KMCC என்ற கூட்டமைப்பின் முயற்சியின் காரணமாக குறைந்த காலகட்டத்தில்ஒருங்கிணைத்த இந்த மாபெரும் நிகழ்வு அனைவரையும் வியக்க வைத்தது.

ஒரு காலத்தில் கேரளாவில் கிராமத்தில் நடந்து வந்ததும், காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வரும் இரு குழுக்கள் வலிமையை பறைசாற்றும் கயிறு இழுக்கும்போட்டியானது ஜெத்தா காலித் வலீத் அல் ருசுக் விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் சவூதி மற்றும் UAE யில் வெற்றி பெற்ற 15 குழுக்கள் பங்கெடுக்க , அதில் சிறந்த மூன்று போட்டிகளில்
01 ரீ மாக்ஸ் லைட்டிங் ரெட் அரேபியா அணி முதல் பரிசு ரியால் 10001
02 PMY முண்டுப்பறம்பு டீம் இரண்டாவது பரிசு ரியால் 6001
03 கே ம் சி சி நிலம்பூர் மூன்றாவது பரிசு ரியால் 4001
04 ஸ்டார்ட் அலைன் UAE கனேடியன் டீம் நாலாவது பரிசு ரியால்2001.

வெற்றி பெற்று பரிசு தொகை தட்டி சென்றனர். ஜெத்தா கே.எம்.சி.சிமத்திய குழு உப தலைவர் சி.கே. ரசாக் மாஸ்டர்அவர்களின் தலைமையில் நடந்த இந்த விழாவில் சவுதி தேசிய கே.எம்.சி.சி தலைவர் குஞ்சுமொன்காக்கிய போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

VP முஸ்தபா வரவேற்புரை வழங்கி சக்கரியா அரளம் நன்றியுரை வழங்கஜெத்தா நகரின் முக்கிய அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அன்புடன் M.Siraj
Comments