அரசுப் பள்ளி மாணவர்களின் இந்த வெற்றிக்கு கடினமாக உழைத்த ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும், மாணவ மாணவியர்களுக்கும் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தேர்வு எழுதிய 58 மாணவர்களின் சராசரி மொத்த மதிப்பெண்கள் 425 என்று தலைமையாசிரியர் திரு. சேகர் தெரிவித்தார்.
மேலும், தேர்வில் முதல் 5 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு அன்பளிப்பாளர்கள் வழங்கிய பரிசுத் தொகையானது ஜெத்தா தமிழ்ச் சங்கம் மூலம் இன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். அன்பளிப்பு அளித்து அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தியவர்களுக்கு வேப்பலோடை மக்களும் ஆசிரியர்களும் நன்றி தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், வேப்பலோடை போன்ற பின்தங்கிய கிராமங்களில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற இது போன்ற பாராட்டுக்கள் ஊக்கப்படுத்தும் என்றனர்.
வேப்பலோடை அரசு பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் உந்துததால் பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பசுமை பரப்பி வருவதும், பெற்றோர் ஆசிரியர் கழகம் வேறெங்கிலும் காணாதபடி இப்பள்ளியின் வளர்ச்சியில் மிகச் சிறப்பாக செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது.
அன்புடன் சிராஜ்
Comments