top of page

ஜெத்தா தமிழ்ச்சங்கத்தின் தன்னார்வலர்கள் இந்த ஆண்டு ஹஜ் பயணிகளுக்கு நிறைவான சேவை

Writer's picture: RaceTamil NewsRaceTamil News




ஜெத்தா தமிழ்ச்சங்கத்தின் தன்னார்வலர்கள் இந்த ஆண்டு ஹஜ் பயணிகளுக்கு நிறைவான சேவை செய்த மனநிறைவில் இல்லம் திரும்பினர்.


மினாவுக்கு வந்த பயணிகள், அவர்கள் தங்கும் கூடாரங்களை அடைய வரைபடங்கள் உதவியுடன் வழி காட்டவும், ஜம்ரா போக வழி வகுக்கவும், நடக்க முடியாத ஹாஜிகளை சக்கர நாற்காலிகளில் கொண்டு போகவும், JTS தன்னார்வலர்கள் மிகுந்த அக்கறையுடன் உதவினர்.


மேலும், பகல் மற்றும் இரவு என சுழற்சி முறையில் ஜெத்தா தமிழ்ச்சங்க தன்னார்வலர்கள் தொய்வில்லாமலும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சேவை மனப்பான்மையுடன் இறைவனின் தயவை மட்டுமே எதிர்பார்த்து மிகவும் ஆர்வத்துடன் பணியாற்றினர்.


பகலில் கடினமான வெயிலையும், இரவில் சூடான காற்றையும் பொருட்படுத்தாமல், நம் இந்திய ஹாஜிகளுக்கு மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்கும் சேவை செய்வது தங்களின் பாக்கியம் என்றே கருத்தில் கொண்டு கடமையாற்றினார்கள்.


இந்திய தூதரகத்தின் உதவியுடன் தேவையான அடையாள அட்டை பெற்று கொடுத்தும், தன்னார்வலர்களுக்கு மினாவில் தங்கும் இட வசதி ஏற்பாடு செய்து கொடுத்தும், துவக்கம் முதல் இறுதி வரை கூடவே இருந்து ஜெத்தா தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர் பொறியாளர் காஜா மொஹிதீன் ஒருங்கிணைத்தார். இவர்களின் இந்த மகத்தான சேவையினை ஜெத்தா தமிழ்ச்சங்கம் மனதார பாராட்டுகிறது



200 views0 comments

댓글


bottom of page