
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் ஈத் அல் பித்ர் தினத்தை முன்னிட்டு அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு குடும்ப புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து ஷேக் முகமது கூறுகையில், குடும்பத்துடன் விடுமுறையை கழிப்பது ஒரு ஆசீர்வாதம் ஆகும்.
“விடுமுறைகளை குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுடன் செலவிடுவது ஒரு ஆசீர்வாதம். ஈத் அல் பித்ர் திருநாளில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலக மக்கள் அமைதி மற்றும் மகிழ்ச்சியை தொடர வாழ்த்துகிறேன்” என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராமில் 3.2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, ஈத் அல் பித்ர் விடுமுறையின் போது ஷேக் முகமது தனது பேரக்குழந்தைகளுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
Comments