
திருவண்ணாமலை நகரத்தைச் சேர்ந்த திரு.ராஜகோபால் தமாமில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த நிலையில் அபராதம் விதிக்கப்பட்டு வேலைக்குச் செல்ல முடியாமல் ஓராண்டுக்கும் மேலாக தாயகத்திற்கும் செல்ல முடியாமல் போன நிலையில்
இராஜகோபாலின் மனைவி திருமதி பரிமளா திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.முருகேஷ் அவர்களிடம் தனது கணவரை மீட்டுத் தருமாறு 19.06.2023 அன்று புகார் மனு அளித்தார். அதன் பின்பு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையகத்திலும் மீட்டுத் தருமாறு புகார் மனு கொடுத்தார்.
புகார் மனு ஜெத்தா தமிழ்ச் சங்கப் பொறியாளர் காஜா மைதீன் அவர்களின் கவனத்திற்கு வந்ததும், அவர் நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் அரசு அலுவலகங்கள் அவர் சம்பந்தமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து முயற்சித்து அபராதத் தொகை விலக்கு மற்றும் பைனல் எக்ஸிட் பெற்றுத் தந்து தாயகத்திற்குச் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து 03.08.2023 அன்று தாயகத்திற்குத் தமாம் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பெரும் முயற்சி எடுத்து தாயகத்திற்கு அனுப்பி வைத்தமைக்கு பொறியாளர் காஜா மைதீன் அவர்களுக்கும் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தினருக்கும் திரு ராஜகோபால் மற்றும் அவரது மனைவி, குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
ஜித்தா தமிழ்ச் சங்கம் (JTS)
Comentarios