ஜெத்தாவில் வசிக்கும் பழம்பெறும் திருவிதாங்கூர்வாசிகள் குழுவான ஜெத்தா திருவாங்கூர் அசோசியேஷன், ‘ஒற்றுமைக்கான ஓணம் 2024' என்று நடத்திய நிகழ்வில் குழு உறுப்பினர்கள் மட்டுமன்றி, சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
கொண்டாட்டத்தில் ஓணம் விருந்து, மகாபலி வரவு, திருவாதிரை நடனம், கிராமிய நடனம் , கயிறு இழுத்தல் போட்டி, என திருவிதாங்கூரின் தனித்துவமான கலை நிகழ்ச்சிகள் பழையகால நினைவுகளை உயிர்ப்பித்ததாக விழாவில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஜேடிஏ தலைவர் அலி தெக்குதோட், செயல் செயலாளர் ஷிஹாப் தாமரகுளம், பொருளாளர் நாசர் பன்மனா, முஜீப் கன்னியாகுமரி, மசூத் பலராமபுரம், ராஜிகுமார், ஷாஜி காயம்குளம், மஜாசாஹிப், ரஃபி பீமாபள்ளி, சியாத் படுதோட், நவாஸ் சிதார், நவாஸ் பீமாபள்ளி, நூஹு பீமாபள்ளி லிசி, ஜெனி, கதீஜா பேகம் ஜோதி பாபு குமார் ஷாஹினா ஆஷிர், ஷானி மாஜா ஆகியோர் விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
புரவலர் திலீப் தாமரகுளம் 'ஓணம் பண்டிகை தரும் ஒற்றுமை என்ற தலைப்பில் பேசினார். நூஹு பீமாபள்ளி, விஜேஷ் சந்துரு, ஆஷிர் கொல்லம் ஆகியோர் ஓணம் பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்வித்தனர். மித்ரஸ் மருத்துவ சேவை கூட்டமைப்பு நடத்திய திருவாதிரை நடனம் மற்றும் நடன ஆசிரியை சீதா அவர்கள் ஒருங்கிணைத்த நடனங்கள் விழாவில் முத்தாய்ப்பாக அமைந்தது.
அன்புடன் M.Siraj
Kommentare