
ரியாதில் இறந்த தமிழரின் உடலை தமிழகத்திற்கு அனுப்பி வைத்த NRTIA வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் (ரியாத்) மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (ரியாத்)
கள்ளக்குறிச்சி மாவட்டம், எக்கக்குடி மாவட்டத்தை சேர்ந்த திரு. சண்முகம் ரியாத் Family Care மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக 05.05.2024 அன்று இறந்தார்.
குடும்பத்தினர் வேண்டுகோள் வைத்ததின் அடிப்படையில் இறந்த உடலை இந்திய தூதரகம் மற்றும் சுகாதார அமைச்சகம் மற்றும் காவல்துறை உதவியுடன் 18.05.2024 அன்று தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
திரு. சந்தோஷ் NRTIA மற்றும் திரு. ஜோசப் பீட்டர் VCK ஆகியோரால் அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களும் சம்பந்தப்பட்ட துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
அனைத்து வேலைகளும் திரு. ரவி மற்றும் திரு. உதயகுமார் ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் மிக வேகமாக நடந்தன.
திரு. சந்தோஷ் NRTIA அவர்கள் இறந்தவரின் குடும்ப உறவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பதற்கும், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம்"இலவச ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்வதிலும் பெரிதும் உதவினார்.
அன்புடன் சிராஜ்
Comentários