
சவுதி அரேபியாவில் தமிழ் சமூகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சமூக சேவகராகவும் தொழில் அதிபராகவும் விளங்கிய திரு. கஸ்ஸாலி அவர்களின் மறைவு, தமிழக சமூகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தின் மேல் அவர் கொண்ட அன்பையும், வழங்கிய சேவைகளையும் நினைவு கூறும் இரங்கல் கூட்டம், ரியாத் பத்தாஹ் லூஹா மார்ட் அரங்கில் வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் -ரியாத் (NRTIA) துணை அமைப்பாளர் திரு. டாக்டர் சந்தோஷ் அவர்களின் தலைமையில் ஜனவரி 23, மாலை 8 மணிக்கு நடைபெற்றது.

கூட்டத்தில் திரு. கஸ்ஸாலி அவர்களின் சமூக பணி, தன்னலமற்ற சேவை, மற்றும் அன்பு நிறைந்த உறவு முறை ஆகியவற்றை திரு. ஜாஹிர் உசென்: ரியாத் NRTA மற்றும் திமுக மண்டல தலைவர்திரு. ஷேக் ஒலி: துணைத்தலைவர்
திரு. சாமி துரை: செயலாளர்
திரு. ஜனார்த்தனன்: ஒருங்கிணைப்பாளர்
திரு. வாசிம் ராஜா: துணை ஒருங்கிணைப்பாளர்
திரு. அப்துல் ரகுமான்: இளைஞர் அணி தலைவர்
திரு. செய்யது: SAT கார்கோ நிறுவனர்
திரு. நசீர்: இந்திய முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பாளர்
திரு. ரஹமதுல்லா: இந்திய நல மன்ற (IWF) துணைத் தலைவர்
திரு. அருண் குமரன்: ரியா குழுமம்
திரு. குமரன்: உலகளவிய தமிழர் நல சங்கத்தின் துணைத்தலைவர் ஆகியோர் அனைவரும் திரு. கஸ்ஸாலி அவர்களின் தன்னலமற்ற சேவைகள், சமூகத்திற்காக அவர் செய்த சாதனைகள் மற்றும் அவரது வாழ்க்கை எப்படி அனைவருக்கும் உந்துசக்தியாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டு பேசினர்.
இரங்கல் கூட்டத்தின் நிறைவில், திரு. டாக்டர் சந்தோஷ், திரு. கஸ்ஸாலி அவர்களுடன் பகிர்ந்த இனிய நினைவுகளை அனைவருடன் பகிர்ந்து கொண்டார். அவர் வழங்கிய சமூக சேவைகள் அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கும் என்பதையும், அவரது மறைவு சமூகத்திற்கான பெரிய இழப்பு என்பதையும் உணர்ச்சியுடன் எடுத்துக்காட்டினார். இறுதியில், அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்நிகழ்வு இனிய தேநீர் விருந்துடன் நிறைவடைந்தது.
அன்புடன் M.Siraj.
Comments