
நான்காவது “அயலகத் தமிழர் தினம் - 2025”, ஜனவரி 11-12, 2025 ஆகிய இரு நாட்கள், சென்னையில் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார்.
இரண்டாம் நாள் நிறைவு நிகழ்ச்சியின் போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரியும் அயலகத் தமிழர்களுக்கு முதல்வர் அவர்கள் விருது வழங்கி விழா பேருரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் மொரிசியஸ், இலங்கை, தென்னாப்பிரிக்கா, பப்பு நியூ கினியா, மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, கத்தார், குவைத் போன்ற நாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், சவுதி அரேபியாவில் உள்ள என் ஆர் டி ஐ ஏ சார்பில் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த அரங்கத்தில் சவுதி அரேபியாவில் வாழும் தமிழர்கள் தொடர்பான சேவைகள் அனைத்தும் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் சவுதி அரேபியாவில் உள்ள என் ஆர் டி ஜ ஏ நிர்வாகிகள் சந்தோஷ், முருகதாஸ், ஜெத்தா தமிழ்ச்சங்கம் மல்லப்பன், டாக்டர் ஜெரால்ட், ரமணன் மற்றும் இமாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், அயலகத் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவ சேனாதிபதி, செயலாளர் எம் எம் அப்துல்லா எம்பி, துணைச் செயலாளர் விஜயன் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்பாக திறம்பட செய்திருந்தனர்.
அன்புடன் M.Siraj
Comentários