
தஞ்சாவூர் மாவட்டம் சுக்காம்பார் கிராமத்தை சேர்ந்த திரு.அந்தோனி டேவிட் ஜெத்தாவில் கடந்த 09.09.2023 அன்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார்.
இறந்தவரின் உடலை பெற்று தருமாறு குடும்பத்தினர் ஜெத்தா தமிழ்ச்சங்கம் பொறியாளர் காஜா மைதீன் அவர்களுக்கும் சவுதி அரேபியா NRTIA தலைவர் திரு.பிரேம் நாத் அவர்களுக்கும் NRTIA வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இருவரும் இணைந்து துணை தூதரகம் மற்றும் இறந்தவரின் நிறுவனத்தை தொடர்பு கொண்டு உடலை தாயகத்திற்கு அனுப்ப தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து ஜெத்தா இந்திய துணைத் தூதரகத்தின் உதவியுடன் கடந்த 06.10.2023 அன்று இறந்தவரின் உடல் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு உடலை கொண்டு செல்ல தமிழ்நாடு அரசின் இலவச ஆம்புலன்ஸ் என அணைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்க உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சவுதி அரேபியாவில் இருந்து உடலை தாயகத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்த ஜெத்தா தமிழ் சங்கத்தினருக்கும் சவுதி அரேபியா NRTIA வினருக்கும் குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
JTS & NRTIA
Comments