சவுதி அரேபியாவுக்கு விசிட் விசாவில் வருகை தந்து ஜெத்தாவில் தனது மகன் இல்லத்தில் தங்கி இருந்த நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்த ஜனாப் மலாங் யூசுப் காதர் அவர்கள் 26.07.2023 அன்று இறைவன் அழைப்பை ஏற்று கொண்டார்.
உடனடியாக இறந்தவரின் மகன் சுலைமான் ஹமீத் தகவல் தந்ததும் ஜெத்தா தமிழ்ச்சங்கம் JTS பொறியாளர் காஜா மைதீன் அவர்கள் இந்திய துணைத் தூதரகத்தின் தேவையான ஆவணங்களை பெற்று தந்து நல்லடக்க ஏற்பாடுகளை செய்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் TNTJ ஜனாப் முனாப் அவர்களும் மருத்துவமனை மற்றும் இதர ஆவணங்களை பெறும் ஏற்பாடுகளில் உறுதுணையாக இருந்தார்.
28.07.2023 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்பு பாப் மக்காவில் உள்ள அல் சாத் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
பொறியாளர் காஜா மைதீன் அவரகளும் ஜனாப் முனாப் அவர்களும் இணைந்து நல்லடக்கம் முடியும் வரை உடனிருந்து தேவையான அனைத்து பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டனர்!
ஜெத்தா தமிழ்ச்சங்கம் JTS மற்றும் TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் இறந்தவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
ஜெத்தா தமிழ்ச் சங்கம் (JTS)
コメント