top of page

சவுதி அரேபியா அபஹா நகரில் மரணமடைந்த தமிழர் உடல் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Writer: RaceTamil NewsRaceTamil News

திரு.சுந்தர் கலியமூர்த்தி அவர்கள் சவுதி அரேபியா அபாஹா வில் கடந்த செப்டம்பர் 2024 இறந்துவிட்டார். வேலையிழந்து ஹுருப் அடிக்கப்பட்டு இக்காமா காலாவதியாகி கடினமான சட்டச்சிக்கல் ஏற்பட்ட நிலையில். ஜெத்தா தமிழ்ச்சங்கம் பொறியாளர் காஜா மைதீன் அவர்களிடம் உடலை மீட்டு தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.

அதன் பின்பு அவர் உடனடியாக

தேவையான சட்ட ரீதியான ஏற்பாடுகளை இந்திய துணைத் தூதரகம் மற்றும் சவுதி அரசாங்கத்தின் உதவியுடன் பெரும் முயற்சி எடுத்து செய்து முடித்தார். ஹபீல் எனும் ஸ்பான்சர் இல்லாத காரணத்தால் ஊருக்கு உடலை அனுப்ப மருத்துவ பரிசோதனைகள் மற்றும் விமான டிக்கட் செலவு உள்ளிட்டவைகளுக்கு பணம் இல்லாத நிலையறிந்து

பொறியாளர் காஜா மைதீன் அவர்கள் இந்திய துணைத் தூதரகத்தின் வாயிலாக அனைத்து செலவிற்கும் தேவையான நிதி உதவியைப் பெற்று தந்து உடலை தாயகம் அனுப்பி வைத்தார். அவரது உடல் கடந்த 16.11.2024 அன்று சென்னை விமான நிலையத்தில் உறவினர்களால் பெறப்பட்டது.

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு உடலை கொண்டு செல்ல தமிழ்நாடு அரசின் இலவச ஆம்புலன்சை அயலகத் தமிழர் நலத்துறையின் வாயிலாக பெற்று தந்து அவர்கள் பெரிதும் உதவினார். பெரும் முயற்சி எடுத்து சொந்த ஊருக்கு உடலை அனுப்பி வைத்த பொறியாளர் காஜா மைதீன் மற்றும் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தினருக்கும் ஆவணங்கள் சேகரிக்க பெரிதும் உதவிய சமூக ஆர்வலர் திரு. முகமது ஹனிபா அவர்களுக்கும் இறந்தவரின் குடும்பத்தினர் உறவினர்கள் நன்றி செலுத்தினார்கள்.


ஜெத்தா தமிழ்ச்சங்கம் - JTS


அன்புடன் M. Siraj

 
 
 

Comentarios


bottom of page