top of page

சவுதி அரேபியா ஜெத்தா நகரில் சாலை விபத்தில் இறந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் செவிலியர் உடல் தாயகத்திற்கு 10.05.2024 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.

Writer's picture: RaceTamil NewsRaceTamil News

18.04.2024 அன்று ஜெத்தா நகரில் உள்ள மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி ரீனா சேட்டூ சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். உடனடியாக ஜெத்தா தமிழ்ச்சங்கம் பொறியாளர் காஜா மைதீன் அவர்களுக்கு தகவல் கிடைக்க மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தேவையான சிகிச்சைகளை ஏற்பாடு செய்தார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட உடலை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க காஜா மைதீன் அவர்கள் இந்திய துணை தூதரகம் மற்றும் பணிபுரியும் நிறுவனத்திற்கு தேவையான உதவிகளை கடந்த 10.05.2024 ஜெத்தாவில் இருந்து அனுப்பப்பட்டது, மேலும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தமிழ்நாடு அரசின் இலவச ஆம்புலன்ஸ் ஏற்பாடுகள் செய்து கொடுத்தார் .

இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த காஜா மைதீன் மற்றும் ஜெத்தா தமிழ் சங்கத்தினருக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.


அன்புடன் சிராஜ்

74 views0 comments

Comments


bottom of page