top of page

ரியாதில் தமிழர் திருநாள் 2025 மற்றும் பிரீமியர் லீக் தொடக்க விழா

Writer: RaceTamil NewsRaceTamil News

சவூதி அரேபியா ரியாத் வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் (NRTIA) மற்றும் சவுதி அரேபியா தமிழ்நாடு விளையாட்டு சங்கம் (SATSA) சார்பில் தமிழர் திருநாள் - 2025 மற்றும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடக்க விழா சிறப்பாக 14 பிப்ரவரி 2025, வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ரியாதில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய நிகழ்வை, NRTIA துணை பொறுப்பாளர் Dr. சந்தோஷ் பிரேம் மற்றும் தமிழ் கலாச்சார பாரம்பரிய செயலாளர் திரு. முருகவேல் ஒருங்கிணைத்தனர். அதன் பின்னர் SATSA செயலாளர் திரு. நாகராஜன் மற்றும் SATSA தலைவர் திரு. பிரின்ஸ் பாண்டியன் முன்னுரை வழங்க, சிறப்பு விருந்தினர்கள், திரு. யூசுப் - கிராண்ட் லக்கி உணவக உரிமையாளர்,திரு. ரஃபீக் - நிறுவனர் ESTBANH Forklift Maintenance,

திரு. மொகைதீன் சலீம் - இந்திய தூதரகம் வழிகாட்டல் குழு ஆலோசகர், தமிழ்நாடு,திரு. ஆயர்பாடி ஜாகீர் உசேன் - வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் அமைப்பின் தலைவர், திரு. அருண் குமரன் & திரு. விவேக் - ரியாத் இந்திய சங்கம் (RIA),

திரு. நூர் முகமது - இந்திய வெல்பேர் ஃபோரம் ஒருங்கிணைப்பாளர் (IWF),திரு. ஹைதர் அலி - ரியாத் தமிழ் சங்க தலைவர்,திரு. நாசர் - காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளர் (IUML),Dr. ஆஷா கார்த்திகேயன் MBBS, DGO, MRCOG - மகளிர் மருத்துவ நிபுணர், Al Ryan International Clinics, KSA, ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.

SATSA தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) அணிகள் & கேப்டன்கள்

தமிழ்நாடு பிரீமியர் லீக் அணிகளுக்கான ஜெர்சி வெளியீட்டு நடைபெற்றது.


*1. கன்னியாகுமரி டைனமைட் - இன்பண்ட் பிரேம் குமார்

2. தென்காசி சாலஞ்சர்ஸ் - ஆசர் சாபி

3. கடலூர் கிரிக்கெட் ரைடர்ஸ் - ஜான் பாஷா ஹனீப்

4. கள்ளக்குறிச்சி வாரியர்ஸ் - மிர்சா காதர்

5. புதுக்கோட்டை பிரதர்ஸ் - சுலைமான்

6. காரைக்குடி காளை - பாசில்

7. ராயல் கிங்ஸ் திருச்சி - ரத்தினகுமார்

8. சென்னை ராயல்ஸ்- கஜராஜன்

9. நெல்லை சூப்பர் கிங்ஸ் - அப்துல் ரஹீம்

10. மதுரை சிங்கம்- சக்தி

11. சிவகங்கை சூப்பர் கிங்ஸ் - பாண்டியராஜன்

12. டெல்டா வாரியர்ஸ் (திருவாரூர்) - மன்சூர் கான்*

SATSA தமிழ்நாடு பிரீமியர் லீக் வெற்றிக்கோப்பை திரு. முகைதீன் சலீம், Dr. சந்தோஷ் பிரேம் (NRTIA & NRT) மற்றும் திரு. நூர் முகமது (IWF) அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.


தொடர்ந்து கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் இசை நிகழ்ச்சிகள், மற்றும் பியானோ இசை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்விற்காக Grand Lucky Restaurant சார்பில் சிறப்பு Live Kitchen Stall ஏற்பாடு செய்யப்பட்டது.


இந்த நிகழ்வில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தமிழர் ஒருமைப்பாடு மற்றும் விளையாட்டு உறவை ஊக்குவிக்கும் நிகழ்வாக நடந்த இந்த மாபெரும் நிகழ்ச்சி நடக்க காரணமாக இருந்த ஸ்பான்சர்கள் & ஆதரவாளர்கள்,


முதன்மை ஸ்பான்சர் (Title Sponsor): திரு. யூசுப் (Grand Lucky Restaurant), ஜெர்சி ஸ்பான்சர் (Jersey Sponsor): திரு. ரஃபீக் (ESTBANH Forklift Maintenance),

இணை ஸ்பான்சர்கள் (Co-Sponsors): Ryan International Clinics, திரு. வாசிம் (Thambis Restaurant), Sports Central (Hara), Al Qimam Construction Company, NAFCO, Indian Spice Restaurant, திரு. கெஜாராஜன், திரு. பாலசுப்ரமணியன்,திரு. பெரோஸ் கான், திரு. நாகராஜன், திரு. முரளி சேகர், திரு. ஜவஹர்,திரு. சோனு பல்வானி, ஊடக ஆதரவு (Media Support): Saudi News, துணை ஸ்பான்சர் (Associate Sponsor): NRTIA, ஆகியோருக்கு நன்றி தெரிவித்து நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.


அன்புடன் M.Siraj

 
 
 

Comments


bottom of page