
செங்கடல் தமிழ்ச் சமூகம் தமிழர் திருநாளை Winter Festival ஆக ஜெத்தா மாநகரில் அல்ரிஹாப் லயலி நூர் ஹாலில் நடத்தியது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக
கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி புகழ் குரேஷி மற்றும் சன் சிங்கர், சூப்பர் சிங்கர் புகழ் ரிஹானா ஆகியோர் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்தனர்.

மிகச் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக நடந்த நிகழ்வில் கடந்த மாதம் நடத்தப்பட்ட பள்ளி குழந்தைகள் போட்டிகளுக்கான பரிசுகள், மெடல்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் ஜெத்தா வாழ் கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கத்துக்கு
தலைமையேற்க ரியாத் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர் கவிஞர் ஃபக்ருத்தீன் இப்னு ஹம்துன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் முக்கிய புரவலரும் Universal Inspection Company நிறுவனத்தின் CEO & M.D சகோதரர் பதுருத்தீன் அப்துல் மஜீது அவர்கள் கலந்து கொண்டு சிற்றுரையாற்றி, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கினார் ஒரே ஆண்டில் மூன்று உலக சாதனைகள் (கின்னஸ்) செய்து முடித்த சகோதரரின் செயற்கரிய செயல்களுக்கும், சேவைகளுக்கும் அங்கீகாரம் அளிக்கும் விதமாக செங்கடல் தமிழ்ச் சமூகம் United தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து தங்கத் தமிழன் விருதினை வழங்கி கௌரவித்தது.

நிகழ்ச்சியில் தமிழ் சமுதாயத்திற்காக தொண்டாற்றி வருகின்ற சேவையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். குறிப்பாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெத்தா மாநகரில் வசிக்கும், MEPCO அமைப்பின் மூலம் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வருகின்ற லியாக்கத் அலி, வெள்ளி விழா கண்ட தமிழ்ச் சங்கமான ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் சிராஜுதீன், தம்மாம் நகரைச் சேர்ந்த யுனைடெட் தமிழ்ச் சங்கத்தின் செயலாளரும், திமுக முன்னோடியுமான சிக்கந்தர் பாபு, சவூதி அரேபியா NRTIAவின் துணை அமைப்பாளர் ரியாத் Dr சந்தோஷ் பிரேம், மதீனா நகரின் சமூக சேவகர் அஷரஃப் அலி, இந்தியப் பன்னாட்டுப் பள்ளிக்காக இந்திய தூதரகத்தால் நியமிக்கப் பட்ட M.C Dr ஹேமலதா மற்றும் Dr. ஜுபைர் உள்ளிட்டோரின் சேவைகளை பாராட்டி கவுரவித்தனர்.
மேலும் குழந்தைகளின் கண் கவரும் நடனங்கள், கலாச்சார நடனங்கள், பாடல்களுடன் சிறப்பு அழைப்பாளர்களின் மிமிக்ரி, நகைச்சுவை என பல்சுவை நிகழ்ச்சிகள் ஒருங்கிணைத்து அற்புதமாக நடத்தி செங்கடல் தமிழ்ச் சமூகம் உறுப்பினர்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.
அன்புடன் M. Siraj
Comments