தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் மற்றும் கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய 28-வது இரத்ததான முகாம் 3.11.2023 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.
73 நபர்கள் கலந்து கொண்ட இம்முகாமில் 64 நபர்களிடமிருந்து இரத்தம் தானமாக பெறப்பட்டது. முகாமில் இரத்ததானம் செய்தவர்களில் பெரும்பான்மையினர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பினும் இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்களும் மற்றும் பிற நாட்டவர்களும் குறிப்பாக பெண்களும் கலந்து கொண்டு குருதிக் கொடை அளித்தனர்
இந்த முகாம் பற்றி பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல தலைவர் முஹம்மது முனாஃப், இது போன்ற முகாம்களை நாங்கள் நடத்துவது வழக்கம். மருத்துவமனையில் வேண்டுகோளின் பேரில் இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்தோம் என்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில், இதுவல்லாமல் அவ்வபோது அவசர இரத்ததான சேவைகளும் செய்து வருகிறோம்.
டாக்டர். ஐமன் மற்றும் டாக்டர். அஹ்மத் இலியாஸ் அவர்கள் தலைமையில், ஜெத்தா கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் இரத்த வங்கி குழுவினர் சிறப்பான சேவையில் இந்த முகாம் இனிதே நடைபெற்றது. மேலும் கிளை நிர்வாகிகள் மற்றும் தன்னார்வாளர்கள் பம்பரமாக சுழன்று இந்த முகாமினை சிறப்பாக நடைபெற உதவினர்.
அன்புடன் சிராஜ்
Comments