
இவ்வருட ஹஜ் பயணிகளின் தேவையை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் மற்றும் கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய 27-வது இரத்ததான முகாம் 16.06.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. முகாமில் 88 நபர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 78 நபர்களிடமிருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டது.
இம்முகாமில் இரத்ததானம் செய்தவர்களில் பெரும்பான்மையினர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பினும் இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்களும் பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டவர்களும் கலந்து கொண்டு குருதிக் கொடை அளித்தனர். பொதுவாக பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைவு என்பது சாதாரணமானது. இருப்பினும் பெண்களும் இரத்த தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த முகாம் பற்றி பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல தலைவர் முஹம்மது முனாஃப், இது போன்ற முகாம்களை நாங்கள் நடத்துவது வழக்கம். இவ்வருடம் ஹஜ் செய்ய வரும் ஹாஜிகளின் தேவையை முன்னிட்டு, இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்தோம் என்றார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், இதுவல்லாமல் அவ்வபோது அவசர இரத்ததான சேவைகளும் செய்து வருகிறோம்.

டாக்டர். ஐமன் மற்றும் டாக்டர். அஹ்மத் இலியாஸ் அவர்களின் தலைமையில், சகோ. ஆதில் செய்யது அல் முன்தஷ்ரீ அவர்களின் மேற்பார்வையில், கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனையின் இரத்த வங்கி குழுவினரான சகோ. ஸைனி ஹுஸைன் அல் பக்ரீ, சகோ. அஹ்மத் மூஸா அல் அர்ரியானி, சகோ. முஹம்மது அயாத் அல் முத்தைரீ மற்றும் செவிலியர்கள் ஆகியோரின் சிறப்பான சேவையில் இந்த முகாம் இனிதே நடைபெற்றது.
மேலும் கிளை நிர்வாகிகள் மற்றும் தன்னார்வாளர்கள் பம்பரமாக சுழன்று இந்த முகாமினை சிறப்பாக நடைபெற உதவினர்.

Kommentare