top of page

வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் - ரியாத் (NRTIA) நோன்பு திறப்பு - இஃப்தார் நிகழ்ச்சி.

Writer: RaceTamil NewsRaceTamil News

சவூதி அரேபியாவில் தமிழர் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் - ரியாத் (NRTIA), 07-03-2025 (வெள்ளிக்கிழமை) அன்று கேண்டில்ஸ் லக்சுரி ஹால், ஷேக் அல்ஜஸீரா ரோடு, அல் சுலாய், ரியாதில் நடத்தியது.

இந்த நிகழ்வில் திரு. முகமது ஃபைசல், தமிழ்நாடு அயலகத் தமிழர் நல வாரியத்தின் நிர்வாக குழு உறுப்பினர், NRTIA London அமைப்பாளர், திமுகவின் லண்டன் அயலக அணியின் முக்கிய பொறுப்பாளர் மற்றும் சிறப்பு விருந்தினராக திரு. டாக்டர் சுபைர் கான் MS Ortho , திமுகவின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு மாநில செயலாளர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தமிழர்கள் மட்டுமல்ல, மதசார்பற்ற உறவுகள் ஒன்றிணைந்த ஒரு அற்புதமான நிகழ்வாக இஃப்தார் அமைந்தது.

சவூதி அரேபியா தமிழ்நாடு விளையாட்டு சங்கம் (SATSA) நடத்திய தமிழ்நாடு பிரீமியர் லீக் - சீசன் 02 வெற்றியாளர்களுக்கு வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டன. SATSA செயலாளர் திரு. நாகராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினரை வாழ்த்தி சிறப்புரை வழங்கினார்.

NRTIA - NON RESIDENT TAMIL INDIAN ASSOCIATION, Riyadh Chapter, (வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் - ரியாத்) சார்பாக நடந்த இந்த விழாவில், சவூதி திமுக ரியாத் மண்டலம் நிர்வாகம், சவூதி துணை அமைப்பாளர்: Dr. சந்தோஷ்,சவூதி ரியாத் ஒருங்கிணைப்பாளர்: திரு. ஜனார்தனன், சவூதி ரியாத் துணை ஒருங்கிணைப்பாளர்: திரு. வாசிம், சவூதி ரியாத் துணை ஒருங்கிணைப்பாளர்: திரு. சரவணன்,ரியாத் தலைவர்: திரு. ஆயப்பாடி ஜாஹிர் உசேன், நகர தலைவர்: திரு. நவாஸ், ரியாத் பொருளாளர்: திரு. வெல்கம் ஆறுமுகம், ரியாத் கொள்கை பரப்பு செயலாளர்: திரு. மேலூர் ஷாஜஹான்,ரியாத் இளைஞரணி தலைவர்: திரு. அப்துல் ரஹ்மான்,ரியாத் இளைஞரணி செயலாளர்: திரு. அய்யூப் பைசல், ரியாத் இளைஞரணி பொருளாளர்: திரு. மன்சூர், ரியாத் வர்த்தக அமைப்பு செயலாளர்: திரு. பைசல், ரியாத் மகளிரணி தலைவி: திருமதி. Dr. கவிதா கணேஷ், தமிழ் கலாச்சார பாரம்பரிய செயலாளர்கள்: திரு. முருகவேல், திரு. நீதிமாறன், ஆகியோரின் ஒத்துழைப்புடன், திரு. Dr. சந்தோஷ் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.


அன்புடன் M. Siraj


Comentarios


bottom of page