கடந்த 24.01.2026 அன்று காலை 06. 30 மணிக்கு நாகை மாவட்டம் வவ்வாலடி கிராமத்தை சேர்ந்த உம்ரா பயணிகள் ஆறு பேர் வந்த வாகனம் ரியாத்தில் இருந்து புனித மக்கா வரும் போது தாயிஃப் அருகில் ரித்வான் எனுமிடத்தில் விபத்து ஏற்பட்டது.
தகவல் கிடைத்தவுடன் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம், ஜித்தா மண்டல IWF துணை செயலாளர் பொறியாளர் பனங்காட்டூர் KPM அப்துல் ஹலீம் மற்றும் மருத்துவ அணி செயலாளர் மங்களக்குடி தாஹா ரசூல் ஆகியோர் தாயிஃப் மருத்துவமனையில் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், ரிதுவான் என்ற இடத்திற்கு 150 கிலோமீட்டர் தூரம் பயணித்து போக்குவரத்து காவல் நிலையத்தில் தேவையான வேலைகளையும், மற்றும் வாகனத்தை ஓட்டி வந்த அவர்களின் மகன் சார்ந்த அரசாங்க தனாசில் வேலைகளையும் உடனே முடித்துக் கொடுத்தார்கள்.
இதில் ஒரு பெண்மணிக்கு மட்டும் கால் எலும்பு முறிந்த விட்டதாலும்,மற்ற அனைவர்களும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் இன்றும் (25.01.2025) அங்கு தங்கியிருந்து அவர்களுக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
தகவல்:
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்,
ஜித்தா மேற்கு மண்டலம்,
சவுதி அரேபியா.
அன்புடன் M.Siraj
Comments