04 ஜனவரி 2025 அன்று சென்னை தி.நகரில் உள்ள தியாகராயர் கலை அரங்கத்தில், SYPA சாதனையாளர்கள் 2025, விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறந்த தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், சமூக சேவகர்கள், சமூக சேவை அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை தேர்ந்தெடுத்து 50 நபர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.
இதில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த திரு. அஹமது இம்தியாஸ், திரு. சாகுல் ஹமீது, திரு. பத்ருதீன் அப்துல் மஜீத் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, நீதியரசர் மேதகு பக்கீர் முஹம்மது இப்ராஹிம் கலிபுல்லா அவர்களும், உயர் நீதிமன்றத்தின் நீதிபதி, நீதியரசர் கே. என். பாஷா, மற்றும் நீதியரசர் அக்பர் அலி அவர்களும், மற்றும் பல முக்கிய விருந்தினர்களும் வழங்கினர்.
முன்னதாக இந்த நூற்றாண்டின் சிறந்த சாதனையாளர் விருதுக்கு கிரசண்ட் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் மறைந்த மேதகு பி.எஸ். அப்துல் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவ்விருதை இலங்கையைச் சேர்ந்த முனைவர் முஹம்மது ஃபசல் ஜிப்ரி அவர்கள் வழங்க கோஸ்டல் எனர்ஜியின் நிறுவனத் தலைவரும் மறைந்த பி. எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களின் புதல்வரும் ஆகிய திரு. அஹமது புகாரி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
ஜமால் மொஹம்மத் கல்லூரியின் முன்னாள் மாணவரும் கல்வி மற்றும் தமிழ் கலாச்சாரத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டும், ஸைபா நிறுவத்தினர் மொஹமட் ரபீக் அவர்கள் இந்த விழாவை சிறப்பாக நடத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
தகவல்: அஹ்மத் இம்தியாஸ்
ரியாத் தமிழ்ச் சங்கம்
அன்புடன்: M.Siraj
Comments