தமிழ் வளத்திற்காகவும், தமிழர் நலத்திற்க்காகவும் கடந்த 21 வருடங்களாக சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பேரமைப்பு ரியாத் தமிழ்ச் சங்கம்.
மாணவச் செல்வங்களின் திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மாணவர் கலைவிழாவை ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டும் 2024-2025, குறும்படம், MIME (பாவனை நாடகம்), பேச்சுப் போட்டி, மாறுவேடப் போட்டி, கிராமிய நடனம் என பல்சுவை நிகழ்ச்சி தாருஸ்ஸலாம் இன்டர்நெஷனல் DPS பள்ளி அரங்கத்தில் கடந்த 08-Nov-2024 அன்று சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வுக்கு பிரபல நடிகரும், தன்முனைப்பு பேச்சாளருமான திரு. மைம் கோபி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மற்றும் இந்த நிகழ்ச்சியில் பிற பொதுநல அமைப்புகள் சார்ந்த சகோதரர்களும், தமிழ் மாணவ-மாணவிகளின் திறமைகளை ஊக்கப்படுத்தும் விதமாக ரியாத் வாழ் தமிழ் நெஞ்சங்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
பல போட்டிகளில் அதிக புள்ளிகளை ஈட்டிய MMIES பள்ளிக்கு ரிதச சுழற்கோப்பை யும் வழங்கப்பட்டது. ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு அளித்த அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் ரியாத் தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவிக்க விழா இனிதே நிறைவு பெற்றது.
அன்புடன் M.Siraj
Comments