top of page
Writer's pictureRaceTamil News

ரியாத் தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டு போட்டிகள்

ரியாத் வாழ் தமிழர்களிடையே விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு பல்வேறு விளையாட்டுகளின் இடையில் கைப்பந்து துறட்டு (Tournament) நடத்துவது என முடிவு எட்டப்பட்டது. சமூக வலைத்தளங்கள் வாயிலாக செய்திகள் பகிரப்பட்டு போட்டிகளுக்கான அணிகளின் பதிவுகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.

இலங்கைத் தமிழ் நண்பர்களிடமிருந்து ஓர் அணி உட்பட மொத்தம் 12 கைப்பந்து அணிகள் பதிவு செய்யப்பட்டன.


இழைநிலை (League)போட்டிகள் கடந்த நவம்பர் -22, 2024 அன்று தொடங்கியது. ஒவ்வொரு குழுவில் இருந்தும் ஒரு அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் கடந்த 13-டிசம்பர், 2024 அன்று நடத்தப்பட்டன.

ஸ்பார்டன்ஸ் பத்தாஹ்‌ - அ மற்றும் ஸ்பார்டன்ஸ் பத்தாஹ்‌ - ஆ அணிகள் முதல் அரையிறுதி போட்டியில் RTG வெற்றி மற்றும் ஸ்னைப்பர்ஸ்-1 அணிகள் இரண்டாவது அரையிறுதியிலும் களம் கண்டன.

அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஸ்பார்டன்ஸ் பத்தாஹ்‌ - அ மற்றும் ஸ்னைப்பர்ஸ்-1 அணிகள் இறுதிப் போட்டியில் களம் கண்டன.

ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய 2-வது கைப்பந்து துறட்டின் தும்பையராக (Runner-up) ஸ்னைப்பர்ஸ்-1 அணியும் வாகையராக (Champions) ஸ்பார்டன்ஸ் பத்தாஹ்‌ - அ அணியும் வெற்றி பெற்றன. அதனையடுத்து, சீலர் விருது (Fair Play award) ஸ்டார் பாய்ஸ் மற்றும் டெக் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.


மிகவும் சிறப்பாக நடந்து முடிந்த கைப்பந்துப் போட்டிகளுக்கு sports central , Asian markets மற்றும் First telecom industries ஆகிய புரவலர்களின் பங்கு அளப்பரியது. ரியாத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் புரவலர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவித்தனர். போட்டிகளுக்கு மிகவும் உறுதுணையாக செயல்பட்ட நடுவர்களுக்கு பாராட்டு கேடயங்கள் அளித்து கௌரவிக்கப்பட்டது.


ஏறத்தாழ இருநூறு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கண்டுகளிக்க நடைபெற்ற இறுதிப் போட்டிகளில் புரவலர்களுடன் சேர்ந்து கைப்பந்து துறட்டின் ஒருங்கிணைப்பாளர் திரு. மதி சங்கிலி முத்து துணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு. செந்தில் மற்றும் திரு. ராம்மோகன் மற்றும் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு. சரவணன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள்

மற்றும் கோப்பைகளை வழங்கினர்.

அன்புடன் M.Siraj

498 views0 comments

コメント


bottom of page