top of page

ஜெத்தா நகரில் தன்னம்பிக்கைப் பேச்சாளர் கோபிநாத் முதுகாடு நிகழ்ச்சி

Writer: RaceTamil NewsRaceTamil News

உலக மலையாளிகள் கூட்டமைப்பின் (WMF) ஜெத்தா கவுன்சில் சார்பாக “இனிய குடும்பம் நாளைய எதிர்காலம்” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் ஜெத்தாவில் பல்வேறு சமூக-கலாச்சார மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், புகழ்பெற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இந்திய தூதரக அதிகாரி கான்சல் மொஹம்மத் ஹாசிம், இந்திய தூதரக பன்னாட்டுப் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், துணை முதல்வர் திருமதி.பர்ஹா மசூத் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.



ஜெத்தா இந்தியப் பன்னாட்டுப் பள்ளி அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், குழந்தைகளின் எதிர்காலத்தை பெற்றோர்கள் தான் தீர்மானிக்கிறார்கள் என்றும், அவர்களின் வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக பெற்றோர்கள் தான் என்றும், மேலும் அவர்கள் மூலமாகத்தான் குழந்தைகள் சமூகத்தில் பொறுப்பானவர்களாக உருவாகிறார்கள் என்றும் கோபிநாத் முத்துகாட் அறிவுறுத்தினார். குழந்தைகளின் முன்மாதிரியாக பெற்றோர் இருப்பதால் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு செயலும் செய்ய மாட்டேன் என்ற உறுதி ஒவ்வொரிடம் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார் .



மேடையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் பல்வேறு தரத்துடன் வழங்கியது பாராட்டப்பட்டது. புஷ்பா சுரேஷ் மற்றும் அன்ஷிஃப் அபூபக்கர், சனி ஷாநவாஸ் மற்றும் தீபிகா சந்தோஷ் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்ட நடனங்களும், காலத்தின் தேவைக்கேற்ப போதைப்பொருட்களுக்கு எதிரான எதிர்ப்பு என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட பிரேம் குமார் வட்டப்போயில் இயக்கிய துஸ்வப்ன தேவதா என்ற கவிதையின் காட்சி விளக்கமும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. கலைநிகழ்ச்சியில் மிர்சா ஷெரீப், மும்தாஜ் அப்துரஹ்மான், விஜிஷா ஹரிஷ், ஜாபி மற்றும் விவேக் பிள்ளை ஆகியோர் பாடல் பாடினர்.

இந்நிகழ்வில் முக்கிய பேச்சாளராக இருந்த கோபிநாத் முதுகாடு அவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சிக்கு WMF Jeddah Council தலைவர் ஷாநவாஸ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், டாக்டர் மோகன் பாலன் WMF அமைப்பை பற்றியும் மற்றும் முசாஃபிர் மலையாளம் நூஸ் ஆசிரியர், திரு. கோபிநாத் அவர்களின் சேவை பற்றியும் பேசினார். பொதுச் செயலாளர் உன்னி தெக்கெடத் வரவேற்றதோடு, பொருளாளர் சாஜி குரியகோஸ் நன்றி கூறினார். இதை சுசித்ரா ரவி மற்றும் மனோஜ் மாத்தூர் தொகுத்து வழங்கினார்.


அன்புடன் சிராஜ்


Comments


bottom of page