சவூதி பட்டத்து இளவரசரும், துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான இளவரசர் முகமது பின் சல்மான், நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க மசூதிகளுக்கான சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கியுள்ளார். இது பல்வேறு வாகனங்களில் உள்ள 130 வரலாற்று சிறப்புமிக்க மசூதிகளை சீரமைத்து புணரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார் பட்டது இளவரசர்.
இந்த மறு சீரமைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 130 மசூதிகள் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
அதில், ஆறு மசூதிகள் ரியாத் மாகாணத்திலும், ஐந்து மக்கா மாகாணத்திலும், நான்கு மதீனா மாகாணத்திலும், மூன்று அஜீர் மாகாணத்திலும் உள்ளது . கிழக்கு மாகாணத்தில் தலா இரண்டு பள்ளிவாசல்கள், அல் - ஜவ்ஃப் மற்றும் ஜிசான்,மற்றும் வடக்கு எல்லைப்புற மாகாணம், தபூக், அல்பாஹா , நஜ்ரான் , ஹைல் மற்றும் அல் - காசிம் மாகாணங்களில் தலா ஒரு பள்ளிவாசல் ஆகும்.
மறுசீரமைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் புதுப்பிக்க வேண்டிய மசூதிகள் அவற்றின் வரலாற்று மற்றும் பாரம்பரிய முக்கியத்துவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அவை நபியின் வரலாறு , இஸ்லாமிய கலிபா அல்லது சவூதி அரேபியாவின் வரலாறு ஆகியவற்றுடன் அவற்றின் தொடர்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன . பாரம்பரிய கட்டிடங்களின் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு துறையில் அனுபவமுள்ள சவுதி நிறுவனங்கள் மூலம் மறுசீரமைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த பட்டத்தை இளவரசர் வழி நடத்தி உள்ளார்.
.
Comments