
கடந்த 21-01-2025 அன்று தாயகத்தில் மரணம் எய்திய ரியாத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவன உறுப்பினர், மேனாள் தலைவர், பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கும் ஆதரவாளராக இருந்தவர், 40 வருடங்களாக ரியாத்தில் பணிபுரிந்த தொழிலதிபருமான மறைந்த முஹைதீன் கஸ்ஸாலி அவர்களின் சமுதாய பங்களிப்பை நினைவுகூரும் விதமாக நூற்றுக்கும் அதிகமான ரியாத் வாழ் அனைத்து தமிழர்களும், கலந்து கொண்டு நினைவேந்தல் வழங்கினார்கள்.

24-01-2025 அன்று ரியாத் சோழா உணவகம் அரங்கில், ரியாத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இரங்கல் கூட்டம் அதன் தலைவர் திரு. ஹைதர் அலி அவர்கள் தொடங்கி வைக்க திரு. அஹமது இம்தியாஸ் அவர்கள் நெறியாள்கை செய்தார்.

பல்வேறு அமைப்புகளிலிருந்தும், உறவினர்கள், நண்பர்கள், தொழில் முனைவோர்கள் என நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு அவரின் சமூக பங்களிப்பையும், திருக்குரானை தமிழ் மொழியில் எளிய முறையில் பயில்வதற்காக Understanding Quran Acadamy என்ற தமிழ் பிரிவை நிறுவி உலகின் பல்வேறு பகுதிகளில் சென்று பயிற்றுவித்தது பலரும் சிலாகித்து பேசினார்கள்.
இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும், ஜித்தா, தம்மாம் போன்ற பகுதிகளிலிருந்தும் இணையம் வழியாக இணைந்து பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.
சரியாக மதியம் 2:30க்கு தொடங்கி, 6:30 வரை நடந்த இந்த நிகழ்வில் பலரும் கண்ணிருடன் இணையம் வழியாக இணைந்திருந்த அவர்களின் குடும்பத்தினருக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.
அன்புடன் M. Siraj
Comments