
சவுதி அரேபியாவின் தெற்கு மாகாணத்தில் உள்ள அபாஹாவில் உம்ரா யாத்ரீகர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் பலியாகினர். வங்கதேசத்தில் இருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று திங்கள்கிழமை நள்ளிரவு விபத்துக்குள்ளானது.

ஜெட்டா வழித்தடத்தில் அபாஹா மற்றும் மஹயில் இடையே ஷஹர் அல்-ரபாத் என்ற கணவாயில் பேருந்து விபத்துக்குள்ளானது. யாத்திரைகளை அழைத்து சென்ற பேருந்தில் பிரேக் செயலிழப்பு காரணமாக பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் 20 யாத்ரீகர்கள் உயிரிழந்ததாகவும், 29 பேர் படுகாயமடைந்ததாகவும் வளைகுடா ஊடகங்கள் செய்தியில் வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபிய குடிமைத் தற்காப்பு மற்றும் செஞ்சிலுவை ஆணையம் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டது. காயமடைந்தவர்கள் மஹாவில் உள்ள பொது மருத்துவமனை, அபாஹா ஆசிர் மருத்துவமனை மற்றும் அபாஹா தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

Comments