
சவுதி அரேபியா ராஜ்ஜியம் மார்ச் 5 முதல் தொற்று நோய்க்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது, அந்த வகையில் தற்போது கிங் ஃபஹ்த் காஸ்வே வழியாக நாட்டிற்கு செல்லும் மற்றும் வெளியேறும் பயணிகளுக்கான புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறைகள் என்ன ?
பயணிகள் வருகையின்போது PCR Negative முடிவு மற்றும் வைரஸிற்கு எதிரான Antigen சோதனையின் முடிவு இனி சமர்ப்பிக்க வேண்டாம்.
பயணிகள் சவுதி ராஜ்ஜியத்திற்கு வந்தவுடன் நிறுவன தனிமைப்படுத்துதல் அல்லது வீட்டு தனிமைப்படுத்துதல் இனி தேவையில்லை , மேலும் விசிட் விசாவில் வருபவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்கான செலவுகளை ஈடுகட்ட மருத்துவக் காப்பீடு வைத்திருக்க வேண்டும்.
ராஜ்ஜியத்தில் இருந்து வெளியேறும் பயணிகள் 3 டேஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் ( இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி எடுத்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகாதவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்)
அதைப்போல் சிறுவர்களுக்கு ( 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் )
மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி எடுப்பவர்களும் அதற்கான மருத்துவ காப்பீட்டை வைத்திருந்ததால் அவர்களுக்கும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
Commentaires