
சவுதி அரேபியா தமிழ் சமூகத்தில் குறிப்பிடத்தக்க சமூக சேவகர் மற்றும் தொழில் அதிபராக உயர்ந்த திரு. கஸ்ஸாலி அவர்களின் மறைவு, சமூகத்தில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இரங்கல் கூட்டம் தம்மாம் மைமூனா ரெஸ்டாரண்ட் அரங்கில், யுனைடெட் தமிழ் சங்கம் செயலாளர் மற்றும் கோபார் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான திரு S.K.S சிக்கந்தர் பாபு அவர்களின் தலைமையில் ஜனவரி 23 அன்று மாலை 8 மணிக்கு நடைபெற்றது. திரு. கஸ்ஸாலி அவர்களின் சமூகத்தின் மேல் கொண்ட அன்புக்கும், சேவைக்கும் எடுத்துக்காட்டாக அவரின் மறைவை நினைவு கூர்ந்து பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தங்கள் உரைகளையும், இரங்கலையும் வெளிப்படுத்தினர்.

தொழில் அதிபர் திரு. உமாசங்கர், லாஜிஸ்டிக் மேலாளர் திரு. அஷ்ரப், சமூக செயற்பாட்டாளர் திரு. யூனுஸ், ஜெபசிங், மலக் கோல்ட் & டைமண்ட் மேலாளர் திரு. சுலைமான், சலாகுதீன், அன்சாரி, பிலால், முகைதீன்,அன்வர்,அசிம்பாய்,ஷாருக்கான்,பிரகாஷ்,சிவா,ரவூப், சையத் இஸ்மாயில் மற்றும் தொழில்முனைவோர்கள், மற்றும் சமூக தலைவர்கள் ஆகியோர் திரு. கஸ்ஸாலி அவர்களின் தன்னலமற்ற சேவைகள் மற்றும் அனைவருக்கும் அவர் வழங்கிய ஆதரவு குறித்து குறிப்பிட்டார்.

இறுதியாக, இந்நிகழ்வின் இரங்கல் கூட்டத்தை ஒருங்கிணைத்த யுனைடெட் தமிழ் சங்கத்தின் செயலாளர் திரு. S.K.S சிக்கந்தர் பாபு அவர்கள், திரு. கஸ்ஸாலி அவர்களுடனான உன்னதமான நினைவுகளை பகிர்ந்து கொண்டு, அவரது சமூக சேவையை நினைவு கூர்ந்து அதன் மூலம், கஸ்ஸாலி அவர்களின் வாழ்க்கை மற்றும் வேலைப்பாடுகள் எப்படி பலருக்கும் முன்னுதாரணமாக இருந்தது என்பதை கூறி, அன்னாரது அனைத்து பாவங்களையும் இறைவன் மன்னித்தருள துவா செய்தார்.
இந்த நிகழ்வின் இறுதியில், அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிறகு, இனிய இரவு உணவுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
அன்புடன் M.Siraj
Comments