
தனிநபர் விளையாட்டுகளில் தனிப்பட்ட சில வெற்றிகளே கிட்டும், ஆனால் குழு விளையாட்டுக்கள் தான் ஒட்டுமொத்த அணிக்கே வெற்றி கோப்பையை பெற்று தரும்.

வெற்றி என்பது போட்டியின் தரத்தில் தான் இருக்க வேண்டும், இறுதி மதிப்பெண்ணில் இல்லை என்ற தாரக மந்திரத்தை தைஃப் தமிழ்ச் சங்கம் பிரதிபலிக்கும் வகையில், அதன் உறுப்பினர்களிடையே விளையாட்டு உணர்வை வளர்க்கும் வகையில், தொடர்ந்து பல விளையாட்டுகளை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் அவர்கள் 3 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட IHG CSW கோப்பை கிரிக்கெட் போட்டியில் தைஃப் இன்டர்கான்டினென்டல் ஹோட்டலின் டிஃபா கிங்ஸ் அணிக்கும் மற்றும் தைஃப் தமிழ் சங்கத்தின் TTS அணிக்கும் இடையேயான போட்டியில் டிஃபா கிங்ஸ் அணி 2/1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
TTS அணியின் கேப்டன் சுஜாத் பாஷா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். தைஃப் தமிழ் சங்கம் அணிக்கு கேப்டன் சுஜாத் பாஷாவும் மற்றும் டிஃபா அணிக்கு கேப்டன் காஷிப் அலியும் தலைமை தாங்கினர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான போட்டியை பார்வையாளர்கள் விறுவிறுப்புடன் கண்டுகளித்தனர். அமர் ரூபெல் முபாரக் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.
ரெஹான் சிறந்த பந்துவீச்சாளராக தேர்ந்தெடுக்க பெற்றார். தைஃப் தமிழ் சங்கத்தின் சிறந்த பேட்ஸ்மேனாக திரு.தினேஷ் மற்றும் சிறந்த பந்துவீச்சாளராக திரு. இம்ரான் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
அன்புடன் M.Siraj
Comments