
வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் துணை அமைப்பாளர் (சவுதி அரேபியா அயலக அணி. NRTIA) மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை - சவுதி அரேபியா சட்டத் துணை ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் சந்தோஷ் பிரேம் வின்ஃபிரெட், சவுதி அரேபியா, ரியாத் அவர்கள் தலைமையில், வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் (NRITA) சங்கத்தின் துணை அமைப்பாளர் (சவுதி அரேபியா அயலக அணி) திரு. முருகதாஸ் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் (NRTIA) சங்கத்தின் இந்திய-சவுதி அரேபியா தகவல் தொடர்பு அமைப்பாளர்கள் திரு சாகுல் ஹமீது, திரு. லாபின், திரு. அமீர் அலி ஆகியோர்
தமிழக முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களையும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான் அவர்களையும் சந்தித்து பேசினார்கள்.


டாக்டர். சந்தோஷ் பிரேம் வின்ஃபிரெட் அவர்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள் சவுதி அரேபியா சட்டத் துணை ஒருங்கிணைப்பாளராக தம்மை நியமனம் செய்தமைக்கு முதல்வர் அவர்களிடமும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் அமைச்சர் அவர்களிடமும் நன்றி தெரிவித்து வாழ்த்துப் பெற்றார்.


இந்த சந்திப்பில் ஒருங்கிணைந்த சவுதி அரேபியா தமிழ்ச் சங்கம் (United Tamil Sangam UTS ) நிர்வாகிகள் முனைவர் நாகராஜன் கணேசன் மற்றும் திரு. முருகதாஸ் இருவரும் கலந்து கொண்டு சவுதி அரேபியாவின் அனைத்துப் பகுதி தமிழ்ச் சங்களின் கூட்டமைப்பான ஒருங்கிணைந்த தமிழ்ச் சங்கம் UTSன் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பாராட்டுப் பெற்றனர். மேலும் இந்த சந்திப்பில், சவுதி அரேபியாவில் வாழும் தமிழர்கள் நலன் மற்றும் இறந்த தொழிலாளர்களின் உடல்களை தாயகம் அனுப்புவது தொடர்பான சில முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அன்புடன் M. சிராஜ்
Comentarios