சவுதி அரேபியாவில் தற்போது தொற்று வைரஸ்யின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஒரு சில கட்டுப்பாடுகளை சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. தற்போது சவுதி அரேபியாவில் 5,400 க்கும் மேல் நோய் தொற்று வைரஸ் பரவி வருகிறது , இந்தநிலையில் குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்கள் கொரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று சவுதி அரசு முன்னர் அறிவித்திருந்தது.
கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதைத் தடுப்பது தொடர்பான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இணங்காத தனியார் துறை நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
அதன்படி , குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உணவகங்கள் ,மால்கள், பொது இடங்கள், திருமண மண்டபங்கள், நிகழ்ச்சிகள், போன்ற இடங்களுக்கு செல்லும் பயணிகள் உடல் வெப்பநிலையை சரிபார்த்த தவறினாலோ அல்லது தடுப்பூசி போடாதவர்கள், சானிடைசர்கள் பற்றாக்குறை,வணிக வண்டிகள் மற்றும் மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்யத் தவறியது, முகமூடி அணிய மறுத்தல், சமூக விதி விதிமுறைகளை கடை பிடிக்காதது, ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியை பின்பற்றாதது, மற்றும் கொரோனா பாசிட்டிவ் நபர்களை அனுமதிப்பது போன்றவை இந்த மீறல்களில் அடங்கும்.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறினால், சிறிய நிறுவனங்களுக்கு 10,000 சவுதி ரியால்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு 100,000 ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் இந்த தவறுகள் தொடர்ந்து நீடித்தால் அபராதம் 200,000 ரியால்கள் வரை இரட்டிப்பாக்கப்படலாம் அல்லது மீண்டும் மீண்டும் மீறினால், நிறுவனம் 6 மாதங்கள் மூடப்படும் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் மூடப்படும் போது, முதல் முறையாக 24 மணிநேரமும், ஐந்தாவது முறை அல்லது அதற்கு மேல் மீண்டும் செய்தால் ஒரு மாதமும் மூடப்படும்.
Comments