சிங்கப்பூருக்கு பேய் எப்படியாவது கடன் எல்லாம் அடைச்சு சொத்து, வீடு, கார் எல்லாம் வாங்கி செட்டில் ஆகலாம் அப்படின்னு நினைச்சு சிங்கப்பூர் வருடங்களுக்கான நிஜ வாழ்க்கை எப்படி இருக்குன்னு தெரியுமா...!!
சிங்கப்பூர் வருபவர்களுக்கு job எப்படி இருக்கு , அவங்களோட உண்மையான சம்பளம் என்ன ? அவங்களால எவ்வளவு சேமிக்க முடியும் ? இதெல்லாம் நீங்க முதல்ல தெரிஞ்சிட்டு சிங்கப்பூருக்கு வாங்க..!
நீங்க சிங்கப்பூருக்கு வரனும்னா S-Pass அல்லது Employment pass ல தான் வர முடியும். S-Pass ல வரதுக்கு டிப்ளமோ அல்லது ஒரு டிகிரி முடிச்சு இருக்கணும். அதே இது Employment pass க்கு அப்ளை பண்ண கட்டாயமாக ஒரு டிகிரி முடிச்சி இருக்கணும்.
சரி, நீங்க ஒரு ஏஜென்ட் மூலமாக S-Pass ல சிங்கப்பூர் வரதா இருந்தா சுமார் 6000 வெள்ளி கட்டணமாக ஏஜென்ட்க்கு கொடுக்க வேண்டும் . இது இந்திய மதிப்பில் சுமார் மூன்று இலட்சத்திற்கும் மேல் இருக்கும்.
அதுவே சொந்தக்காரர்கள் & நண்பர்கள் மூலமாகவும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முதலாளி கிட்ட நேரடியாவே ரெஸ்யூம் அல்லது இதர ஆவணங்கள் கொடுக்கும்போது உங்களுக்கு 50 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரத்திற்குள் செலவுல முடிஞ்சிடும் ஆனால் அரிதிலும் அரிதாக சில பேருக்கு மட்டுமே இந்த மாதிரி வாய்ப்பு அமையும் . அதனால பெரும்பாலானவர்கள் ஏஜென்சி மூலமாக சிங்கப்பூருக்கு வராங்க..!
அது ஏஜென்சி மூலம் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பு ஏஜென்சிகள் இவ்வளவு சம்பளம் என்று சொல்லிவிடுவார்கள் ஆனால் சிங்கப்பூர் அரசு விதிப்படி இவ்வளவு சம்பளம் கிடைக்குமா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை..!
ஏனென்றால் சிங்கப்பூர் அரசு கூறியிருக்கும் சம்பளத்தை அந்த நிறுவனங்கள் முதலாளிகளுக்கு கொடுப்பதில்லை என்பது தான் உண்மை.
நீங்க 3 லட்சம் 4 லட்சம் செலவு பண்ணி S-Pass ல சிங்கப்பூருக்கு வர்றவங்களுக்கு சரியாக கிடைக்க கூடிய சம்பளம் எவ்வளவு தெரியுமா 1200 வெள்ளி தான் , ஆனால் 1800 வெள்ளி என்று சிங்கப்பூர் அரசுக்கு அந்த நிறுவனம் கணக்கு காட்டும். அதிக சம்பளம் வேண்டும் என்றால் நீங்கள் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டும் , முதலாளியின் மனசை கவர வேண்டும் , எள்ளுன்னா எண்ணையா நிக்கணும் அப்படி இருந்தா உங்களுக்கு சிங்கப்பூரில் கூடுதல் சம்பளம் அதாவது இரண்டாயிரம் வெள்ளி வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அதே மாதிரி இந்தியாவில் ஏற்கனவே ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செஞ்சு 5 or 6 வருஷம் அனுபவம் இருக்கிறவங்கள இருந்தீங்க அப்படினா உங்களுக்கு சிங்கப்பூர் அரசு கூறியுள்ள முழு சம்பளம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
சரி, சிங்கப்பூர்ல வேலை பார்க்கிற உங்களுக்கான இருப்பிடத்தை அந்த நிறுவனமே தருமா இல்ல நம்ம தனியா தான் ரூம் எடுத்து தங்கி கொள்ளணுமா...? 70 சதவீத நிறுவனங்களில் ஊழியர்கள் வெளியே தங்குகிறார்கள் , 30 சதவீத நிறுவனங்கள் மட்டுமே நிறுவனங்கள் கொடுக்கக்கூடிய அறைகளில் தங்கி கொள்ளலாம். இதில் உங்களுக்கு எது வேண்டுமென்றாலும் அமையலாம்...!
சிங்கப்பூர் வரணும்னு ஒரு ஆசையில ஏஜென்ட் மூலம் 2 லட்சம் 3 லட்சம் என பணம் கட்டி வாரிங்க ...! ஏஜென்சியில் சொல்லக்கூடிய வேலைதான் கொடுக்கப்படுமா...? அப்படினா இல்ல ...! சொல்லப்போனால் உங்களை எப்படியாவது அனுப்பினால் போதும் அப்படினு ஏஜென்சிகள் இதுதான் வேலை இவ்வளவுதான் சம்பளம் என எதையாவது சொல்லுவாங்க ஆனா உங்கள சிங்கப்பூருக்கு பேக்கிங் செய்து அனுப்புவது தான் அவங்களோட ஒரே குறிக்கோள்..சில நல்ல ஏஜென்சி களும் இருக்கிறார்கள் அவர்கள் சொல்லும் வேலையிலும் ஊதியமும் பணியாளர்களுக்கு கிடைக்கிறது .
சரி இப்போம் வேலைக்கு வந்தாச்சு 1200 வெள்ளியும் சம்பளம் உறுதி ஆச்சு அப்படின்னு வச்சுக்குவோம் இப்போ அதுல இருக்கக்கூடிய செலவுகளை பார்க்கலாம் . நம்ம ரொம்ப ரொம்ப சிக்கனமா செலவு செஞ்சு இருந்தாலும் 800, 900 டாலர்தான் மிச்சமிருக்கும் மறுபடியும் சொல்றேன் இந்த மிச்சம் அப்படிங்கறது ரொம்ப ரொம்ப சிக்கனமா செலவு செய்ய அவங்களுக்குத்தான் தான் , அது இல்லாம நம்ம பந்தாவா செலவு செஞ்சா நம்ம கையில ஒரு டாலர் கூட இருக்காது அது தான் உண்மை .
இதுல வேற நம்ம ஊர்ல பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் என் பையன் சிங்கப்பூர்ல இருந்து மாசம் 2 லட்சம் 3 லட்சம் சம்பளம் எடுக்கான்ணு ஊர்ல பெருமையா மத்தவங்க கிட்ட எல்லாம் சொல்லியது , இது நாளையோ என்னவோ எல்லாத்துக்கும் சிங்கப்பூர் வரணும்னு ஆசை வந்துரும். சொல்லப்போனா அதுவும் உண்மைதான் ஒரு சில பேர் சிங்கப்பூரில் ஐந்து ஆறு வருஷம் உழைத்து நிலையான ஊதியத்தில் அதுபோன்று சம்பளத்தில் இருக்கிறார்கள். ஆனால் சிங்கப்பூரில் s-pass ல வருபவர்களுக்கு உங்களுக்கு நான் முன்னாடி சொன்னது மாதிரி சராசரியா 1,200 டாலர்தான் ஊதியமாக கிடைக்கும் உங்களோட செலவெல்லாம் போக 30 ஆயிரம் ஐம்பதாயிரம் வரைக்கும் அனுப்ப முடியும்.
நீங்க 4 லட்சம் செலவு பண்ணி s-pass ல சிங்கப்பூர் வர நீங்கள் வாங்கிய கடனை அடைக்க குறைந்தபட்சம் ஒரு வருஷம் போராட வேண்டி தான் இருக்கும் இல்லனா 2 வருஷம் கூட ஆகலாம் வாங்கின கடனில் வட்டி குட்டி எல்லாம் போட்டு எல்லாத்தையும் அடச்சி முடிச்சு மூச்சு விடுவதற்கு நிச்சயம் 3 வருடங்கள் ஆகலாம் உங்க தனித் தன்மையை பொறுத்தது ஆடம்பர செலவுகள் இல்லாமல் சிங்கப்பூர்ல நீங்க நாட்களை கடத்தினார் உங்க கடன் அதுவா அடைந்துவிடும்.
முடிந்த அளவு கடன் வாங்காமல் சிங்கப்பூர் வர முயற்சி பண்ணுங்க அப்படி கடன் வாங்காமல் சிங்கப்பூர் வந்த முதல் மாசம் முதல்ல நீங்க வாங்க கூடிய சம்பளமே சேமிப்புதான்.!
Comments