top of page

கோர் ஃபக்கனின் சுற்றுலாப் பயணிகளின் ஹாட் ஸ்பாட் அல் சுஹுப் ரெஸ்ட் ஏரியா மீண்டும் திறப்பு

Writer: RaceTamil NewsRaceTamil News







ஷார்ஜா சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் 'கிளவுட் லவுஞ்ச்' என்றும் அழைக்கப்படும் கோர் ஃபக்கனின் அல் சுஹுப் ஓய்வு பகுதி, கடந்த வாரம் கனமழையின் போது மூடப்பட்டதால் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.


ஜூலை 28 அன்று, நிலையற்ற வானிலை காரணமாகவும், பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக கோர் ஃபக்கனின் அல் சுஹுப் ஓய்வு பகுதி மூடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.



வெள்ள பகுதியில் நீர் வடிந்ததால், முக்கிய சாலைகள் திறக்கப்பட்டன, மேலும் ஷார்ஜாவிலிருந்து ஃபுஜைரா மற்றும் கல்பா வரையிலான பயணிகள் போக்குவரத்து சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டன.


இருப்பினும், செவ்வாயன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வானிலைத் துறை ஒரு புதிய எச்சரிக்கையை வெளியிட்டது அதில், மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், மிகுந்த கவனத்துடன் இருக்கவும், பள்ளத்தாக்குகள், நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப் பகுதிகளைத் தவிர்க்கவும் வலியுறுத்தியது.



நாட்டின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், அபாயகரமான காலநிலை நிலவும் என மக்களை எச்சரித்துள்ளது அபுதாபி காவல்துறை. பள்ளத்தாக்கு மற்றும் அல் ஐன் நகரில் உள்ள மற்ற நீர்நிலைகளில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.


ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், பள்ளத்தாக்குகள் மற்றும் அணைகளில் இருந்து விலகி இருக்குமாறு ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Commenti


bottom of page