top of page
Writer's pictureRaceTamil News

தாயிப் தமிழ்ச்சங்கத்தின் மத நல்லிணக்க நோன்பு திறக்கும் விழா



சவூதி அரேபியாவின் தாயிப் சவுக் பாலட் பூங்காவில் சிறப்பு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தாயிப் தமிழ்ச் சங்கம் நடத்தியது. துவக்க நிகழ்வாக திரு கௌதமன், திரு ஜான், திரு தனராஜ், திரு தினேஷ் மற்றும் திரு சக்திவேல் விருந்தினர்களை வரவேற்றார்கள்.


சிறப்பு விருந்தினர் திரு ஹாஜா ஜவஹர் மற்றும் திரு மீரான் அவர்கள் நோன்பின் மாண்பு, நோன்பின் நோக்கம் நாம் கட்டுப்பாட்டுடனும், இறையச்சத்துடன் எப்படி இருக்க வேண்டும் என்பதும் மத நல்லிணக்கத்தின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்கள். எனது பார்வையில்

தாயிஃப் தமிழ்ச் சங்கம் எந்த விதத்தில் தமிழர்களுக்கு உதவி செய்ய முடியும் என்பதினையும் அதற்க்கு உறுப்பினர்கள் முன் வரவேண்டும் என்றும் திரு மாணிக்கம் அவர்கள் கோரிக்கை வைத்தார். விழா நிறைவில் திரு ஜேக்கப் நன்றி கூறினார்.



தாயிப் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் மட்டுமன்றி சகோதர அமைப்பின் தோழர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வை திரு கார்த்திக் மிக சிறப்பாக தொகுத்து வழங்க, நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை திரு ஜெயக்குமார் ஒருங்கிணைத்தார்.


வந்திருந்த அனைவருக்கும் சுவை மிகுந்த உணவை தயார் செய்த திருமதி சித்ரா மற்றும் திருமதி கலைவாணி இருவரையும் அனைவரும் பாராட்டினர்.




161 views3 comments

3 Comments


Manickam Vasu
Manickam Vasu
Apr 16, 2023

It was nice meet. I enjoyed lot. Nice get together felt like join family gathering.

Like

Jay Ho
Jay Ho
Apr 16, 2023

Great arrangements and we had great time to meet the members once gain on behalf of TTS. wishing you all to be together and stronger. thank you for the Race Tamil news and Mr. Sirajudeen and entire Tamil Sangam team who extended the solid supports.

Like

Its nice moments forever...Thanks to TTS organization

Like
bottom of page