top of page

ஜித்தா இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நடத்திய சன்மார்க்க சமுதாய கருத்தரங்கம்

Writer: RaceTamil NewsRaceTamil News

ஜித்தா இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நடத்திய சன்மார்க்க சமுதாய கருத்தரங்கம் கடந்த 18.08.2023 அன்று லக்கி தர்பாரில் ஆடிட்டோரியத்தில், ஜித்தா மேற்கு மண்டல IWF செயலாளர் பொறியாளர் கீழை இர்ஃபான் அவர்கள் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் கலாநிதி எம்.எல் முபாரக் மதனி அவர்கள் சமகால சவால்களுக்கு மத்தியில் ஒரு முஃமினின் வாழ்வு என்ற தலைப்பிலும் முனைவர் எம் முஜிபுர் ரஹ்மான் உமரி அவர்கள் கூட்டமைப்பாக செயல்படுவதின் அவசியம் எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றிய நிகழ்ச்சியில் இருநூறுக்கும் மேல் ஜித்தா வாழ் தமிழ் சொந்தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



இதில் தாயிப் தாவா நிலைய அழைப்பாளர் மௌலவி அஸ்மி யூசுபி , மற்றும் மௌலவி இத்ரீஸ் ஹசன் ஸஹ்வி, மௌலவி ரஸின் அவர்களும் வருகை தந்தது குறிப்பிடதக்கது. மேலும் ஹாஜிகளுக்கு IWF தன்னார்வலர்கள் செய்த சேவைகளை குறும்படமாக காண்பிக்கப்பட்டு அடுத்த வருடம் IWF வழியாக இந்த மகத்தான சேவைகளை செய்ய மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


ஜித்தா மேற்கு மண்டல IWF துணைச் செயலாளர் பனங்காட்டூர் எம். அப்துல் ஹலீம் அவர்கள் நன்றியுரையுடன் கருத்தரங்கம் நிறைவடைந்தது.


இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)

ஜித்தா

சவூதி அரேபியா.


Comments


bottom of page