
ஜித்தா மாநகரில் கடந்த 5-1-24 அன்று அஜீஸியா தஃவா நிலையத்தில்,தமிழ் பிரிவு - இஸ்லாமிய அழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு மையம், அஜீஸியா, ஜித்தா, மாணவர்களுக்காக உள்ளத்தை பரிசுத்தப்படுத்துவோம் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் செய்யத் இஸ்மாயில் தலைமை வகித்தார்.

முதல் வகுப்பில் மௌலவி அஜ்மல் அப்பாஸி இஸ்லாமியச் சட்டங்களையும் தொழுகை முறைகளையும் பயிற்சி கொடுத்தார்.

இரண்டாம் வகுப்பில் உஸ்தாத். முஹம்மது ரியாசுதீன் அஜிஸி சமகாலத்தில் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் பயிற்சி கொடுத்தார்.
மூன்றாம் வகுப்பில் தாயகத்திலிருந்து காணொளி வழியாக முனைவர். ஹுசைன் பாஷா, சிகரம் தொடு என்ற தலைப்பில் உளவியல் ரீதியாக வாழ்க்கை பயிற்சியளித்தார்.

பிறகு கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் அஹ்மத் பஷீர் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு ஜித்தா இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) தன்னார்வலர்கள் சிறப்பாக உதவிகளை செய்தனர்.
அன்புடன்சிராஜ்
Comments