
அமீரகத்தில் ரமலான் மாதம் தொடங்க இன்னும் ஓரிரு வாரங்கள் உள்ள நிலையில் , அமீரகத்தில் ரமலான் கொண்டாட்டம் கலைக்கட்ட தொடங்கியது. அமீரகத்தில் கொரோனா வந்த பிறகு இது மூன்றாவது ரமலான் ஆகும். ஐக்கிய அரபு அமீரக அரசானது கோவிட் விதிகள், தாராவீஹ் தொழுகைகள், இப்தார் நேரங்கள், வேலை நேரம் போன்ற விதிமுறைகளை அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக மசூதிகள் தராவீஹ் தொழுகையை நடத்தப்படுமா ?
அமீரகத்தில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு வருவதால் இந்த வருடம் மசூதிகளில் தாராவீஹ் தொழுகை நடத்த வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.2020 ஆம் ஆண்டில், கோவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கையாக முஸ்லிம்கள் வீட்டில் பிரார்த்தனை செய்ய அரசு உத்தரவிட்டது. 2021 ஆம் ஆண்டில், கடுமையான விதிகளுடன் மசூதிகளில் ஒரு கூட்டத் தொழுகையான தாராவீஹ் மீண்டும் தொடங்கியது. தராவீஹ் என்பது புனித ரமலான் மாதத்தில் மசூதிகள் முழுவதும் நடத்தப்படும் மாலை நேரத் தொழுகையாகும்.
மசூதிகளில் தொழுகை நடத்துவதற்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் உண்டா?
உண்டு, வழிபாட்டாளர்கள் புனித குர்ஆன் பிரதிகள் மசூதிகளில் அடுக்கி வைக்க அனுமதி உண்டு. வழிபாட்டாளர்கள் தொழுகையின் போது முகமூடி அணிந்து கட்டாயம். ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டும்.
ரமலானில் இப்தார் மற்றும் இம்சாக் நேரங்கள் என்ன?
அமீரகத்தில் ஏப்ரல் 2 புனித மாதத்தின் முதல் நாளாக ரமலான் ஆக இருந்தால், (Fajr prayer) ஃபஜ்ர் தொழுகைக்கான அழைப்பு அதிகாலை 4.51 மணிக்கு வழங்கப்படும் என்று இப்தார் (நோன்பு முடிக்கும் நேரம்) மாலை 6.39 மணிக்கு என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது ரமழானின் முதல் நாள் நோன்பு நேரம் 13 மணி 48 நிமிடங்கள் ஆகும்.
ரமலான் 30 (மே 1) அன்று ஃபஜ்ர் பிரார்த்தனை அழைப்பு அதிகாலை 4.20 மணிக்கும், இப்தார் மாலை 6.53 மணிக்கும் வழங்கப்படும். அதாவது மாதம் முடியும் நேரத்தில், மணி 14 மணி 33 நிமிடங்களாக அதிகரித்திருக்கும்.
இப்தார்களை நடத்துவதற்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளதா?
இல்லை, இப்தார் நடத்துவதற்கான கட்டுப்பாடுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை . பிப்ரவரி மாதத்தில் அமீரகம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதில், சமூக நிகழ்வுகளுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டது . அதனால் திருமணங்கள் மற்றும் பிற சமூக நிகழ்வுகள் முழு திறனுடன் செயல்படலாம் என அனுமதியும் வழங்கியது .எனவே, இப்தார் நிகழ்ச்சிகளை நடத்துவதில் எந்த தடையும் இருக்காது.
இப்தார் கூடாரங்கள் அனுமதிக்கப்படுமா ?
அனுமதி உண்டு, கோவிட் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இப்தார் கூடாரங்கள் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டது.ஆனால் இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதற்கான வழிமுறைகளையும் அரசு அறிவித்துள்ளது.
இப்தார் நடத்துவதற்கு முதலில் Emirates Red Crescent (ERC) இன் அனுமதிகள் கட்டாயம்.
கூடாரத்திற்கு உள்ளே இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியை பராமரிக்க வேண்டும்.
இப்தார் கூடாரங்கள் அனைத்து பக்கங்களிலிருந்தும் திறந்திருக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ரமலான் வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது ஒருவருக்கொருவர் கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும்.
கூடாரத்தில் நுழைவு மற்றும் வெளியேறும் செயல்முறைகள் ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்க வேண்டும் . அந்த பகுதிகளில் காவலர்கள் அல்லது தன்னார்வலர்கள் நிறுத்தப்பட வேண்டும்.
தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கான வேலை நேரம் என்ன?
பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை: மத்திய அரசு ஊழியர்கள் வார நாட்களில் (திங்கள் முதல் வியாழன் வரை) காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை வேலை செய்ய வேண்டும். அரை வேலை நாளான வெள்ளிக்கிழமைகளில், நேரம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வேலை இருக்கும்.
தனியார் துறை: தனியார் துறை ஊழியர்களுக்கு தினசரி வேலை நேரங்களில் இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
பள்ளி நேரங்களும் குறைக்கப்படுமா ?
ஒருங்கிணைந்த அல்லது நிலையான பள்ளி நேரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், பள்ளி நேரம் பொதுவாக ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரத்திற்கு மேல் அனுமதிக்ககூடாது.
அமீரக வானியல் கணக்கீடுகளின்படி, புனித ரமலான் மாதம் ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கும். உண்மையான தேதி சந்திரனைப் பார்ப்பதற்கு உட்பட்டது, இது இஸ்லாமிய நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments