ஜெத்தா: ஜெத்தாவில் ஓராண்டுக்கு முன் உதயமான பாலக்காடு மாவட்ட கூட்டமைப்பின் முதலாம் ஆண்டு விழா இந்திய துணைத் தூதரகத்தில் நடந்தது. நவம்பர் 1ம் தேதி கேரளா மாநிலத்தின் பிறந்தநாள் என்பதால் கேரளா மற்றும் பாலக்காட்டின் தனித்துவமான வடிவங்களை முன்வைத்து பாலக்காடு இரவு கொண்டாடப்பட்டது.
இரவு 7 மணிக்கு சவூதி மற்றும் இந்திய தேசிய கானத்துடன் தொடங்கிய நிகழ்வை இந்திய தூதரக அதிகாரி முஹம்மது ஹாஷிம் தொடங்கி வைத்தார்.
ஜெத்தாவில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் நலனுக்காக உழைத்த அமைப்பின் முக்கிய பிரமுகர்களை அவர் சிறப்பாக பாராட்டியதுடன், ‘பாலக்காடன் இரவு’ என்ற அடைமொழியுடன் ஆரம்பித்த நிகழ்வுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
விழாவிற்கு தலைவர் அப்துல் அஜீஸ் பட்டாம்பி தலைமை வகிக்க, துணைத் தலைவர் முஜீப் திரிதாலா வாழ்த்துரை வழங்கினார். பாலக்காடு சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இலச்சினை (லோகோ) வெளியிடப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பொதுச்செயலாளர் ஜிட்ஸ் எரகுநாத் வரவேற்றார், நிதிக் கட்டுப்பாட்டாளர் நாசர் வலையூர் நன்றி கூறினார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நவாஸ் மேப்பறம்பு மற்றும் சோபியா பஷீர் தலைமையில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர்கள் ஹனன் ஷா, ஷிகா பிரபாகரன் மற்றும் ராப் பாடகர் இச்சு தலைமையில் இன்னிசை, ரியாத் மேளம் டாக்கீஸ் குழுவினரின் சிங்காரி மேளம் மற்றும் குட் ஹோப், ஃபெனோம் டீம் அகாடமிகளின் நடனங்கள் இடம்பெற்றன. சந்தோஷ் பாலக்காடு, சிவானந்தன் பனமன்னா, பிரஜீஷ் பாலக்காடு, தாஜுதீன் மன்னார்க்காட், பிரவீன் சுவாமிநாத், தனேஷ், நஜீப் வெஞ்சாரமூட், ஸ்ரீ லக்ஷ்மி, கிருபா சிவானந்தன், கௌரி மேனன், ஸ்ரீநந்தா, ஷிவானி, சுதிக்ஷா முரளி, அத்விகா பிரதாபன், பார்வதி சந்தீஷ், வைஷ்கா பிரதோஷ் , ஸ்ரீகர் சந்தோஷ் ஆகியோர் தயாரித்த தீரா, பூதன், காலேபாடு, புள்ளுவன்பாடு, கண்ணியார் களி , கும்ப களி ஆகிய கேரளா கலை வடிவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
பாலக்காடு மாவட்ட சங்கத்தின் செயல்பாடுகள், உறுப்பினர்களின் தனிப்பட்ட தனித்திறமைகள் ஆகிவற்றை ஜெத்தா மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக நடந்த நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
அன்புடன் M.Siraj
Comments