ஜித்தாவில் புறநகர் கும்ராவில் தொடங்கி கர்ணியா, ஷரப்பியாவை அடுத்து கடந்த 11.8.24 அன்று பைசாலியாவில் முகாம் நடந்தது. இதில் சவூதி ஜெர்மன் மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட பலருக்கு பதிவு செய்து கொடுக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட சகோ பூபதி லட்சுமி, செந்தில் குமார் ஆகியோர் IWF நிர்வாகிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து மகிழ்ந்தனர்.
மேலும் கடந்த 10-8-24 அன்று தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் காக்கி குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியன்ஸ் வெல்பேர் ஃபோரம் ஜித்தா மண்டல விழி செயலாளர் செய்யத் இஸ்மாயில்
பதிவு செய்து கொடுத்ததும்
குறிப்பிடத்தக்கது.
கடந்த 13-8-24 அன்று தாஜ் மருத்துவமனை ஊழியர் மற்றும் செவிலியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது.
இலவச அடையாள அட்டை பெற கடைசி நாளான 15-8-24 அன்று மாலை 7.30 மணிக்கு பிரபல தமிழக உணவகமான லக்கி தர்பாரில் தனது ஐந்தாவது முகாமை நடத்தவிருக்கிறது .
அன்புடன் M. சிராஜ்
Comments